சிவாஜி வீடு ஜப்திக்கான உண்மை காரணம்.. பேரனின் லீலையால் சீரழிந்த குடும்பம்..பின்னணியில் பிரபல நடிகையா..?

 

போட் ரோட்டில் கம்பீரமாக வீற்றிருக்கும் சிவாஜி கணேசனின் "அன்னை இல்லம்", தற்போது பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது. சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு நடிகர் துஷ்யந்த் ராம்குமார்தான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 1960-களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அவரது தம்பி சண்முகம், இந்த வீட்டை சுமார் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

இரண்டு ஆண்டுகள் உழைத்து, தேக்கு மரங்களை கொண்டு உள் அலங்காரம் செய்து வீட்டை அழகுபடுத்தியுள்ளார். அதன் பின்னரே சிவாஜி கணேசன் தனது குடும்பத்துடன் இந்த இல்லத்தில் குடியேறினார். 

இந்த வீட்டின் முதல் உரிமையாளர் கும்பகோணம் பட்டணம் பொடி முதலியார் ஆவார். அவரிடமிருந்து தான் சண்முகம் இந்த வீட்டை வாங்கினார். அதற்கும் முன்பு, ஜார்ஜ் டவுன் போக் என்ற கவர்னர் இந்த வீட்டில் வசித்து வந்ததாக வரலாறு கூறுகிறது. 

இப்படி பல பெருமைகளைத் தாங்கி நிற்கும் இந்த இல்லம், சிவாஜி கணேசனின் மகன் வழி பேரனான நடிகர் துஷ்யந்த்தால் இன்று ஜப்தி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

சக்சஸ், மச்சி, தீர்க்கதரிசி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த துஷ்யந்த் ராம்குமாருக்கு திரைப்படத் தயாரிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. விஷ்ணு விஷாலை வைத்து "ஜெகஜால கில்லாடி" என்ற திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தார். 

இதற்காக தனலட்சுமி எண்டர்பிரைசஸ் என்ற நிதி நிறுவனத்திடம் 5 கோடி ரூபாய் கடன் பெற்றார். ஆனால், எதிர்பார்த்தபடி படம் வெளியாகாததால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது. காலப்போக்கில் வட்டி சேர்ந்து தற்போது 9 கோடியாக கடன் தொகை அதிகரித்துள்ளது. 

இந்த கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால், அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பிரபல மருத்துவர் ஒருவர் சமீபத்தில் அளித்த யூடியூப் பேட்டியில் இது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 

சிவாஜி கணேசனின் வீழ்ச்சிக்கு நடிகைகளோ அல்லது குறிப்பிட்ட படங்களோ காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறித்து அவர் பேசினார். "சினிமாவை பொறுத்தவரை, தயாரிப்பாளர்கள் சொந்த பணத்தை போட்டு படம் தயாரிப்பது அரிது. 

ஒரு படத்திற்கு பூஜை போட்டவுடன், நடிகர் நடிகைகளின் மார்க்கெட்டை கணக்கிட்டு, சில நிமிட காட்சிகளை படமாக்கி தயாரிப்பாளர்களை அணுகுவார்கள். தயாரிப்பாளர்களுக்கு கதை மற்றும் காட்சிகள் பிடித்திருந்தால், படம் தயாரிக்க பணம் கொடுப்பார்கள். 

சிலர் மட்டுமே சொந்த பணத்தை போட்டு படம் எடுக்கிறார்கள். அப்படி சொந்த பணத்தில் படம் எடுக்கும்போது கணக்கு காட்டுவதற்காக சொத்துக்களை அடமானம் வைப்பது வழக்கம். 

அப்படிப்பட்ட ஏதோ ஒரு விஷயத்தில்தான் இந்த பிரச்சனை நடந்திருக்கும். நடிகை தான் காரணம், அந்த படம்தான் காரணம் என்று சொல்வதெல்லாம் உண்மைக்கு புறம்பானது" என மருத்துவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

பாரம்பரியம் மிக்க அன்னை இல்லம் தற்போது ஜப்தி செய்யும் அபாயத்தில் இருப்பது சிவாஜி கணேசன் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

துஷ்யந்த் ராம்குமாரின் தவறான பொருளாதார முடிவுகளால், வரலாற்று சிறப்புமிக்க அன்னை இல்லத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.