நடிகை நயன்தாரா தனியாக பிரைவேட் ஜெட் வைத்திருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் ஒரு பிரைவேட் ஜெட்டை வாங்குவதை விடவும் அதனை பராமரிக்கும் செலவுதான் அதிகம்.
ஒரு பிரைவேட் ஜெட்டை ஒரு ஆண்டுக்கு பராமரிக்க எவ்வளவு செலவாகும் என்று பார்க்கலாம்.
சொந்தமாக ஒரு தனி விமானம் வாங்க வேண்டும் என்றால் 20 கோடி முதல் 30 கோடி வரை செலவாகும். அதன் பிறகு அந்த ஜெட்டை பார்க் செய்வதற்கு 2 முதல் 3 லட்சம் வரை ஒரு மாதத்திற்கு செலவாகும்.
ஹேங்கர் பீஸ் என்ற வகையில் 10 லட்ச ரூபாய் கட்ட வேண்டும். இந்த இரண்டு விஷயத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வருடத்திற்கு இதற்கு மட்டும் 1.4 கோடி ரூபாய் செலவாகிறது.
இந்த விமானத்தை இயக்குவதற்கு ஒரு பைலட் தேவை. குறைந்தபட்சம் ஒரு பைலைட்டின் சம்பளம் 4 லட்சம் ரூபாய். அதாவது, வருடத்திற்கு 50 லட்சம் ரூபாய்.
அதற்கு அடுத்ததாக ஆகும் செலவு அந்த விமானத்திற்கு நிறப்பப்படும் எரிபொருள் தான். ஒரு மணி நேரம் விமானத்தில் பறக்க வேண்டும் என்றால் 1 லட்சம் ரூபாய்க்கு எரிபொருள் செலவாகும்.
தோராயமாக வருடத்திற்கு 100 மணி நேரம் பறக்க வேண்டும் என்றால் எரிபொருள் செலவு மட்டும் ஒரு கோடி ரூபாய் ஆகும்.
அந்த விமானத்தை தரை இறக்குவதற்கு லேண்டிங் பீஸ் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும்.
மட்டுமில்லாமல் அந்த விமானத்தை பராமரிப்பதற்கு, காப்பீட்டிற்கு, சர்வீஸ் செய்வது என 1 கோடி ரூபாய். அதன் பிறகு விமானத்தை பதிவு செய்வது ஓட்டுநர் உரிமம் இன்னும் சில தவிர்க்க முடியாத செலவுகள் வகையில் 30 லட்சம் ரூபாய் ஆண்டிற்கு செலவாகும்.
வருடத்திற்கு கணக்கிட்டால் வருடத்திற்கு 28 கோடி ரூபாய் செலவாகிறது. ஒரு விமானத்தின் விலையே 20 முதல் 30 கோடி தான் எனும் பொழுது அதனை ஒரு வருடத்திற்கு வைத்து பராமரிக்க வேண்டும் என்றால் 28 கோடி செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது.