ஒரே ஒரு இன்ஸ்டா பதிவு.. ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய பிரபல இளம் சீரியல் நடிகை..!


சீரியல்களைப் பொறுத்தவரை ஒரு கதாபாத்திரத்தில் ஒரே நடிகை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை நடத்தி முடிப்பது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. 

அதுவும் இந்த காலகட்டத்தில் 20 எபிசோடுகளில் நிறுத்திவிட்டு என்னால் தொடர்ந்து நடிக்க முடியாது என்று நடிகைகள் எஸ்கேப் ஆகிய விடுகிறார்கள் அல்லது திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததும் சீரியலை அப்படியே விட்டு விட்டு ஓடி விடுகிறார்கள். 

இது ஒரு பக்கம் இருக்க அவ்வப்போது நடிகைகள் சீரியலில் இருந்து விலகுவதாகவும் நடிப்புத் துறையை விட்டு விலகுவதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்குவார்கள். 

அந்த வகையில் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இதயம் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஜனனி அசோக் வெளியேறியிருந்தார். அந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்நிலையில், இன்னொரு நடிகையும் நடிப்பிலிருந்து விலகுவதாக தகவலை வெளியிட்டிருக்கிறார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி என்ற தொடரில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீ கோபிகா தற்போது நடிப்பை சுத்தமாக நிறுத்த முடிவு செய்திருக்கிறார். 

இந்த தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் அம்மணி.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--