சனிப்பெயர்ச்சி எப்போது..? அறிவியல் ஆதாரம் இதோ..!

real-sani-peyarchi-when

நவகிரகங்களில் முக்கியமான கிரகமான சனி பகவான் பெயர்ச்சி என்பது ஜோதிட சாஸ்திரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.  சனிப்பெயர்ச்சி காலத்தை பலரும் எதிர்பார்ப்புடனும், அதே சமயம் பயத்துடனும் உற்றுநோக்குவது வழக்கம். 

இந்த நிலையில், அடுத்து வரவிருக்கும் சனிப்பெயர்ச்சி குறித்து வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் ஆகிய இரண்டு முக்கிய பஞ்சாங்க முறைகளை பின்பற்றும் ஜோதிடர்களிடையே ஒரு விவாதம் எழுந்துள்ளது.

உண்மையான சனிப்பெயர்ச்சி எப்போது..?

வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றும் ஜோதிடர்கள் சனிப்பெயர்ச்சி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிகழும் என்று கூறுகின்றனர்.  ஆனால் திருக்கணித பஞ்சாங்கத்தை பின்பற்றும் ஜோதிடர்களோ, சனிப்பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதியே மீன ராசிக்கு நிகழும் என்று தெரிவிக்கின்றனர்.  

இந்த மாறுபட்ட கணிப்புகள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில், வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் என்றால் என்ன, இவற்றில் எது அறிவியல் பூர்வமானது, சனிப்பெயர்ச்சி உண்மையில் எப்போது நிகழும் என்பதை விரிவாக பார்ப்போம்.

வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் - ஒரு எளிய விளக்கம்:

வாக்கிய பஞ்சாங்கம்:  வாக்கிய பஞ்சாங்கம் என்பது சித்தர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்களால் பாரம்பரியமாக கணிக்கப்பட்ட பஞ்சாங்க முறையாகும். இது பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு பழமையான முறை.  வானியல் கணிதத்தில் மிகவும் அடிப்படையான முறைகளை இது பயன்படுத்துகிறது.

திருக்கணித பஞ்சாங்கம்: திருக்கணித பஞ்சாங்கம் என்பது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வானில் உள்ள கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் பஞ்சாங்க முறையாகும்.  இது நவீன வானியல் கருவிகள் மற்றும் கணித முறைகளை பயன்படுத்தி கிரக நிலைகளை துல்லியமாக கணிக்கிறது.

பிரச்சனை எங்கே?

இரு பஞ்சாங்க முறைகளுக்கு இடையே உள்ள முக்கிய பிரச்சனை, கோவில்களில் நடக்கக்கூடிய பூஜை புனஸ்காரங்கள் மற்றும் விழாக்கள் வாக்கிய பஞ்சாங்கத்தின்படியே நடத்தப்படுகின்றன என்பதுதான்.  கோயில்களில் பெரும்பாலும் வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றும் நிலையில்,  திருக்கணித பஞ்சாங்கத்தை தனிப்பட்ட முறையில் பின்பற்றுவது சரியா என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர்.  

வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றும் ஜோதிடர்கள், கோயில்களில் பழமை மாறாமல் வழக்கத்தை பின்பற்றி வருவதை சுட்டிக்காட்டுகின்றனர்.  அதேசமயம், நவீன யுகத்திற்கு ஏற்றார் போல பலன்களை துல்லியமாக கணிக்க வேண்டுமென்றால் திருக்கணித பஞ்சாங்கமே சிறந்தது என்று திருக்கணித பஞ்சாங்கத்தை பின்பற்றுபவர்கள் வாதிடுகின்றனர்.  திருக்கணித பஞ்சாங்கம் அறிவியல் பூர்வமான பஞ்சாங்கம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அறிவியல் ரீதியான ஆய்வு:

இந்த இரண்டு தரப்பு வாதங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அறிவியல் ரீதியாக சனி பகவான் எப்போது மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் என்பதை வானியல் கோள்களின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்தோம்.  

இதற்காக "ஸ்கை லைவ்" (Sky Live) என்ற இணையதள உதவியுடன் கோள்களின் நகர்வு மற்றும் கிரகப் பெயர்ச்சி ஆகியவை தொடர்பான தகவல்களைப் பெற்றோம்.  பெறப்பட்ட தகவல்களின் புகைப்பட ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

real-sani-peyarchi-when

மேலே உள்ள புகைப்படங்களில், ராசி சக்கரத்தை கும்ப ராசி மற்றும் மீன ராசி என்ற இரண்டு பிரிவுகளாக நேர் மற்றும் கோண அடிப்படையில் பிரித்து காட்டியுள்ளதை காணலாம்.  

real-sani-peyarchi-when

இவற்றுடன் சனி கிரகத்தின் நகர்வை பொருத்திப் பார்க்கும் பொழுது, வாக்கிய பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது போல 2026 பிப்ரவரியில்தான் சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.  

2025 ஆம் ஆண்டு சனி பகவான் கும்ப ராசியிலேயே தொடர்வதை புகைப்பட ஆதாரம் உறுதி செய்கிறது.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்