விபச்சாரத்தை இப்படி பண்ணனும்.. சேலம் RR பிரியாணி உரிமையாளர் பரபரப்பு பேச்சு..!


சேலம் RR பிரியாணி கடையின் உரிமையாளர் தமிழ்செல்வன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் விபச்சாரம் குறித்து நாட்டின் நிலவக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

இது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அவர் என்ன கூறுகிறார் என்றால்.. ஒரு மனிதனுக்கு என்ன தேவையோ.. அதை மூடி வைக்காமல் அவனிடம் கொடுத்து விட்டால் இங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சனையே வராது. 

அவனுக்கு பெண் சுகம் தேவைப்படுகிறது எனும் போது மேலை நாடுகளில் உள்ளது போல.. ஏன் இந்தியாவிலேயே மும்பை டெல்லி கல்கத்தாவில் உள்ளது போல விபச்சாரத்தை சட்டப்படி நடைமுறைப்படுத்தி விட வேண்டும். 

அதனை சட்டபூர்வமாக்கி விட வேண்டும். இங்கே உத்தமன் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் பலர் விமானம் பிடித்து தாய்லாந்துக்கு செல்கிறான். நம்முடைய நாட்டின் 3000 கோடி ரூபாய் பணம் வருஷா வருஷம் தாய்லாந்துக்கு சென்று கொண்டிருக்கிறது. அதனை தடுக்க வேண்டும். 

இங்கே விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி விட்டால் பிரச்சனை இருக்காது. தேவை இருப்பவன் போகிறான்.. தேவை இருப்பவர்கள் சம்பாதிக்கிறார்கள்.. இதில் நாட்டுக்கு என்ன பிரச்சனை வந்தது..? இதை சொன்னால் என்னை எல்லோரும் வில்லன் ஆக்கி விடுவார்கள். இதுதான் நிதர்சனம். 

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குவது தான் பாலியல் ரீதியில் நடக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையுமே தவிர இந்த பக்கம் விபச்சாரம் செய்தாலும் கேஸ் போடுவேன்.. அந்த பக்கம் பாலியல் பலாத்காரம் செய்தாலும் கேஸ் போடுவேன்.. என்றால் மனிதனின் அடிப்படையை தேவையை பூர்த்தி செய்வதற்குள் கொள்வதற்கு வழி எங்கே இருக்கிறது..? 

கல்யாணம் ஆகி மனைவியுடன் இருப்பவனுக்கு பிரச்சனை இல்லை. கல்யாணமே ஆகாத.. மனைவியை பிரிந்த.. இப்படி பல காரணங்களால் பெண் துணை இல்லாமல் இருக்க கூடிய ஒரு மனிதன் அவனுடைய உடல் தேவைக்கு என்ன செய்வான்.. என்பதை சொல்ல வேண்டும் என்று பேசியிருக்கிறார் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை பதிவு செய்யுங்கள்.

Post a Comment

Previous Post Next Post