எத்தனையோ செய்திகள் வரும், போகும் ஆனால், சில செய்திகள் காலங்கள் கடந்தாலும் நின்று பேசும். அப்படி பேசக்கூடிய ஒரு செய்தியை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தமிழ் தொலைக்காட்சி உலகில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர் பாவனா பாலகிருஷ்ணன். விஜய் டிவியில் பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், சிவகார்த்திகேயனுடன் அவரது தொலைக்காட்சி நாட்களில் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தியவர்.
கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளின் போது விளையாட்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய அனுபவம் இவருக்கு உண்டு. பாடகியாகவும், தொகுப்பாளராகவும் பன்முகத் திறமை கொண்ட பாவனா, சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு ட்வீட் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஹிருத்திக் ரோஷனின் "வார்" படம் மற்றும் பாவனாவின் ட்வீட்
பாவனா பாலகிருஷ்ணன் சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த "வார்" திரைப்படத்தைப் பார்த்துள்ளார். இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷனின் அழகையும் நடிப்பையும் பெரிதும் பாராட்டிய அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், ஹிருத்திக் ரோஷன் தனது விந்தணுவை தானம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
"வார் பட விமர்சனம்: ஆண்களுக்கு அதிரடி ஆக்ஷன், கார் சேஸிங், ஹாலிவுட் பாணி ஸ்டண்டுகள் பிடிக்கும். பெண்களுக்கு ஹிருத்திக் மற்றும் டைகர் ஷ்ராஃப் என்ற இரண்டு வலுவான காரணங்கள்! அற்புதமான தோற்றம்! ஹிருத்திக் இன்னும் படங்கள் நடிக்க வேண்டும், விந்தணு தானம் செய்யலாமா??" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
சமூக வலைதளத்தில் எதிர்ப்பு மற்றும் ட்ரோலிங்
பாவனாவின் இந்த ட்வீட் வெளியான சிறிது நேரத்திலேயே, சமூக வலைதள பயனர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். பலர் இதை ஒரு தவறான மற்றும் அநாகரிகமான கருத்து என்று கண்டித்து, அவரை ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
"இது என்ன விதமான பாராட்டு?" என்று சிலர் கேள்வி எழுப்பினர். "பிரபலமாக இருப்பவர்கள் இப்படியான பொறுப்பற்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல" என்று மற்றொரு தரப்பினர் விமர்சித்தனர்.
இந்த ட்வீட் பாவனாவின் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, ஏனெனில் அவர் பொதுவாக தனது நிகழ்ச்சிகளில் நகைச்சுவை உணர்வுடனும் புத்திசாலித்தனத்துடனும் தோன்றுபவர்.
பாவனாவின் நோக்கம் என்ன?
பாவனாவின் இந்த ட்வீட் ஒரு நகைச்சுவை முயற்சியாக இருக்கலாம் என்று சிலர் கருதினாலும், அது பெரும்பாலான மக்களிடம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.
ஹிருத்திக் ரோஷனின் தோற்றத்தைப் புகழ்வதற்காக வித்தியாசமான வழியை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், இது பொது மக்களிடையே எதிர்மறையான எதிர்வினைகளையே பெற்றது.
இதுவரை பாவனா இந்த சர்ச்சை குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை, ஆனால் இது அவரது பிம்பத்தை சிறிது பாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஹிருத்திக் ரோஷன் பதிலடி
இது குறித்து பேத்தி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருத்திக் ரோஷனிடம் கேள்வி எழுப்பிய போது, வேறு ஏதாவது உபயோகப்பூர்வமான கேள்வியை கேளுங்கள் என்று இந்த கேள்வியை தட்டி கழித்து பதிலடி கொடுத்தார்.