உன்னோட மனைவியின் அந்த உறுப்பை பார்த்து இதை சொல்லுவியா.. நடிகை விளாசல்..!

சினிமா அழகிகள் இப்போதெல்லாம் தங்கள் உடல் குறித்து வரும் கருத்துகளை சாதாரணமாக கடந்து செல்கிறார்கள். 

ஆனால், சமூக வலைத்தளங்கள் அறிமுகமாகி வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நிலைமை அப்படி இல்லை. பல நடிகைகள் ரசிகர்கள் தங்களுடைய அங்கங்களை வர்ணிப்பதை சரியாக எடுத்துக் கொள்ளவில்லை. இதை நிரூபித்தவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகை விஷாகா சிங். 

கடந்த 2014-ஆம் ஆண்டு, நடிகை தீபிகா படுகோன் ஒரு முன்னணி ஊடக நிறுவனம் பெண்களை பொருளாக்குவதைக் கண்டித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

அப்போது, நடிகை விஷாகா சிங் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு மோசமான கருத்துக்கு பதிலடி கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

விஷாகா சிங் பதிவிட்ட ஒரு சாதாரண புகைப்படத்திற்கு, எம்.டி. முஸ்தகிம் சைஃபி என்ற ஒரு பேஸ்புக் பயனர் “நைஸ் லுக்கிங்.. உங்கள் மார்பு நைஸ்” என்று கருத்து தெரிவித்தார். இது விஷாகாவுக்கு பிடிக்கவில்லை. 

அவர் உடனடியாக பதிலளித்து, “திரு. எம்.டி. முஸ்தகிம் சைஃபி, 1

) உங்கள் புரொஃபைல் படத்தில் இருக்கும் அந்த அப்பாவி குழந்தையின் புகைப்படத்தை நீக்குங்கள். 

2) உங்கள் சொந்த படத்தை வைக்கும் தைரியம் இருந்தால் வைத்து கருத்து சொல்லுங்கள்,” என்று காட்டமாக பதில் அளித்தார். மேலும், “நான் பெண் என்பது எனக்குத் தெரியும். உங்கள் பொது அறிவுக்கு, ஆம், எல்லா பெண்களுக்கும் மார்பகங்கள் உள்ளன. 

உங்கள் அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை, மகள், தோழிகள் என அனைவருக்கும் உள்ளது. அவர்களிடம் சென்று ‘உங்கள் மார்பு நைஸ்’ என்று சொல்வீர்களா? உங்களை நினைத்து பரிதாபப்படுகிறேன். 

என் முகத்துக்கு நேராக இதை சொல்ல தைரியம் இருக்கிறதா? இல்லையென்றால், என் பக்கத்தில் இருந்து வெளியேறுங்கள்,” என்று கூறி அவரை சாடினார்.

இந்த சம்பவம், பெண்களை பொருளாக்கும் மனப்பான்மைக்கு எதிராக சினிமா நடிகைகள் எவ்வளவு தீவிரமாக போராடுகிறார்கள் என்பதை காட்டுகிறது

விஷாகாவின் பதில், ஆணாதிக்க கருத்துகளுக்கு எதிரான துணிச்சலான எதிர்ப்பாக அமைந்தது. சமூக ஊடகங்களில் பெண்கள் தங்கள் குரலை உயர்த்துவது, இதுபோன்ற அவமரியாதையான நடத்தைகளை குறைக்க உதவும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.


Post a Comment

Previous Post Next Post
--Advertisement--