விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. இந்த நிகழ்ச்சியில் தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்த அவர், பின்னர் சினிமாவிலும் கால் பதித்தார். நடிகர் சதிஷுடன் நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து சில சிறிய பட்ஜெட் படங்களிலும் நடித்து வந்தார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
சமீபத்தில் பவித்ரா வெளியிட்ட ஒரு வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது முகத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து பலரும் ஆச்சரியமும் குழப்பமும் தெரிவித்து வருகின்றனர். "முகத்திற்கு என்ன ஆச்சு?", "இப்படி மாறிவிட்டதே!" என்று கமெண்டுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
சிலர் இது ஒப்பனை அல்லது வீடியோ எடிட்டிங் காரணமாக இருக்கலாம் என விவாதிக்க, மற்றவர்கள் உடல்நலம் அல்லது வேறு காரணங்களை யூகிக்கின்றனர்.
பவித்ரா இதற்கு முன்பு தனது அழகு மற்றும் புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு பெயர் பெற்றவர். எனவே, இந்த திடீர் மாற்றம் ரசிகர்களை கவலைப்படுத்தியுள்ளது.
இதுவரை பவித்ரா இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது வெறும் தற்காலிக மாற்றமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெளிவாகவில்லை. ஆனால், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பவித்ராவை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.