சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ஒரு வீட்டின் கூரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் குவிந்து கிடப்பதாகக் காட்டுகிறது.
இந்த வீடியோவில், கூரையிலிருந்து பிடிக்கப்படும் மழைநீரை சுத்தமானதாக நினைத்து, வீட்டின் உரிமையாளர் உணவு சமைப்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்தியதாகவும், ஒரு கட்டத்தில் நீரின் சுவை மாறியதை அறிந்து அதற்க்கான காரணத்தை தேடிய போது சிக்கிய காட்சிகள் தான் இது என்ற வசனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருந்தாலும், இந்த வீடியோ சமூகத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெட்டிசன்கள் இதை வேடிக்கையாகவும், அதிர்ச்சியாகவும், சிலர் நையாண்டியாகவும் அணுகுகின்றனர். பொதுவாக, கூரைகள| மேலே பறவைக் கழிவுகள், குப்பைகள் இருப்பது சகஜம். ஆனால், ஆணுறைகள் குவிந்திருப்பது அசாதாரணமானது.
வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “கூரையிலிருந்து வரும் நீர் சுத்தமாக இருக்கும் என்று எப்படி நினைப்பார்கள்?” என்று கேள்வி எழுப்புகின்றனர். சிலர், “இதனால் கூடுதல் புரோட்டின் கிடைத்திருக்கும்” என்று கிண்டலடிக்க, மற்றவர்கள் “இது தான்டா உண்மையான பேபி ஷவர்” என்று நகைச்சுவையாக கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த ஆணுறைகள் எப்படி அங்கு வந்தன என்ற கேள்வியும் எழுகிறது. பலர், அருகிலுள்ள ஹோட்டல் அல்லது லாட்ஜில் இருந்து ஜன்னல் வழியாக எறியப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கின்றனர்.
இந்த சம்பவம், மழைநீர் சேகரிப்பின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மழைநீர் சேகரிப்பு, நீர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் நிலையில், கூரையின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும்.
கூரைகளில் மாசுகள், பறவைக் கழிவுகள் அல்லது இதுபோன்ற அசுத்தங்கள் இருக்கலாம், இது நீரை குடிப்பதற்கு ஆபத்தாக மாற்றும். இதற்கு முறையான வடிகட்டுதல், முதல் மழைநீரைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கைகள் தேவை.
இந்த வீடியோ, உண்மையாக இருந்தால், சமூகத்தின் சுகாதார அலட்சியத்தையும், பொறுப்பற்ற செயல்களையும் வெளிப்படுத்துகிறது. ஆணுறைகளை இவ்வாறு வீசுவது, சுற்றுச்சூழல் மாசுபாட்டையும், பொது சுகாதாரப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
இது, தனிநபர் பொறுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. இதைபற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்..? என்று கமெண்ட் பண்ணுங்க.. அதுக்குள்ள எங்க வீட்டு கூரையை ஒருமுறை பரிசோதனை செய்து விட்டு வருகிறேன்.
ஒருவேளை நீங்களும் உங்கள் வீட்டு கூரையை நீண்ட நாட்களாக பரிசோதிக்காமல் விட்டிருந்தால் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்க. கலிகாலம்.