தென்னிந்திய திரையுலகில் கனவுக் கன்னியாக விளங்கிய நடிகை சில்க் ஸ்மிதாவின் மரணம், 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி சென்னையில் நிகழ்ந்து, தமிழகத்தையே உலுக்கியது.
அவரது மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டாலும், அதைச் சுற்றிய பரபரப்பும், பிரேத பரிசோதனை (போஸ்ட்மார்ட்டம்) குறித்த விவாதங்களும் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன.
இந்த மரணம் தொடர்பாக, அப்போதைய காவல்துறை அதிகாரி ஒருவரின் பேட்டியில் வெளியான தகவல்கள், சில்க் ஸ்மிதாவின் மரணத்தையும், அதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை நடைமுறைகளையும் விரிவாக வெளிப்படுத்துகின்றன.
சில்க் ஸ்மிதாவின் மரணம்: பின்னணி
சில்க் ஸ்மிதா, தனது கவர்ச்சியான நடிப்பு மற்றும் நடனத்தால் 1980கள் மற்றும் 1990களில் தென்னிந்திய திரையுலகில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தியவர். அவரது கால் ஷீட் இல்லையெனில், பல படங்களில் கதாநாயகன்-கதாநாயகிகளின் கால் ஷீட் கூட உறுதியாகாத அளவுக்கு அவரது செல்வாக்கு இருந்தது.
இப்படி உச்சத்தில் இருந்த நேரத்தில், சென்னை டி.நகரில் உள்ள அவரது வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம், ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், காவல்துறை மற்றும் ஊடகங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அரசு பொது மருத்துவமனை (GH) வாசலில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டம், அவரது மரணத்தின் தாக்கத்தை எடுத்துக்காட்டியது.
பிரேத பரிசோதனை: நடைமுறைகள் மற்றும் சவால்கள்
சில்க் ஸ்மிதாவின் மரணத்தை அடுத்து, அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இந்த நடைமுறையை கையாண்ட காவல்துறை அதிகாரி ஒருவர், அப்போதைய சூழலை விவரிக்கையில், “எந்தவொரு விஐபி ஆனாலும், தற்கொலை அல்லது விபத்து மரணங்களில் பிரேத பரிசோதனை கட்டாயம்.
இதில் எந்த சலுகையும் கிடையாது,” என்று திட்டவட்டமாகக் கூறினார். சில்க் ஸ்மிதாவின் உடல், மற்றொரு சாதாரண தொழிலாளியின் உடலுடன் ஒரே பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது, இது வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.
“உயிருடன் இருக்கும்போது நிழலை கூட தொட முடியாத அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தவர், மரணத்திற்குப் பின் ஒரு சாதாரண உடலாகவே மாறிவிடுகிறார்,” என்று அவர் தத்துவார்த்தமாகக் கூறினார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், தற்கொலைக்கு உரிய அறிகுறிகள் தெளிவாகக் காணப்பட்டன. கழுத்து எலும்பு முறிவு, கயிற்றால் ஏற்பட்ட குறி, நாக்கு மற்றும் கண்கள் வெளியே தள்ளிய நிலை, மலம் மற்றும் சிறுநீர் தானாக வெளியேறி விடும்.
இவை அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் தற்கொலை மூலம் மரணம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்தின. ஏன் தற்கொலை செய்து கொள்ளும் போது இந்திரியமே வெளியேறிவிடும். அதையும் எடுத்து சோதனைக்கு உட்படுத்துவார்கள்.
ஏனென்றால், தற்கொலை செய்து கொள்ளும் முன்பு யாரேனும் துஸ்பிரயோகம் செய்திருக்கிறார்களா..? என்ற சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக வழக்கமாக நடக்கும் நடைமுறை இது.
இந்த அறிகுறிகள் இல்லையெனில், மரணம் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். ஆனால், இந்த வழக்கில் அறிக்கை தெளிவாக இருந்ததால், காவல்துறை இதை தற்கொலையாக முடிவு செய்து வழக்கை முடித்தது.
“அவர் மரணத்தில் மர்மம் இருக்கலாம்,” என்று சிலர் கருதினாலும், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் காவல்துறையின் விசாரணைகள் தற்கொலை என்ற முடிவை உறுதிப்படுத்தின. இருப்பினும், சில்க் ஸ்மிதாவின் ரசிகர்களின் பாசமும், அவரது திடீர் மறைவு குறித்த ஆதங்கமும், இன்றளவும் அவரைப் பற்றிய பேச்சுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.