தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி உலகில் பிரபலமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, பிக் பாஸ் தமிழ் 3 மூலம் மக்களிடையே பெரும் புகழ் பெற்றவர்.
தற்போது, மிர்ச்சி பிளஸ் ஆப் மற்றும் கானா இணையதளத்தில் ஒளிபரப்பாகும் அந்தரங்கம் அன்லிமிடெட் என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், தாம்பத்திய உறவு மற்றும் பாலியல் ஆரோக்கியம் குறித்து வெளிப்படையாக பேசி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பருவத்தில், அவர் தாம்பத்திய உறவில் முக்கியமான அம்சங்களைப் பற்றி ஆழமாக விவாதிக்கிறார், குறிப்பாக முன் விளையாட்டு மற்றும் பொறுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய ஒரு காணொளியில், ரேஷ்மா தாம்பத்திய உறவில் பெண்களுக்கு ஆண்களின் பொறுமை மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். “எடுத்தவுடன் காஞ்ச மாடு கம்பில் புகுந்தது போல நடந்துகொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது,” என்று அவர் தெளிவாக குறிப்பிட்டார்.
முன் விளையாட்டு ஒரு பெண்ணை உடல் மற்றும் மன ரீதியாக உறவுக்கு தயார்படுத்துவதற்கு முக்கியமானது என்று விளக்கினார். “பெண்ணிடமிருந்து சமிக்ஞை வரும் வரை முன் விளையாட்டை தொடர வேண்டும்; அதற்கு பிறகே அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார்.
மெதுவாகவும், பொறுமையாகவும் செயல்படுவது உறவில் திருப்தியை அதிகரிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். ரேஷ்மா தனது முதல் திருமணத்தில் இதுபோன்ற பொறுமையின்மை காரணமாக சவால்களை எதிர்கொண்டதாகவும், முதலிரவில் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்றும் பின்னர் அது சரியானதாகவும் வெளிப்படையாக பகிர்ந்தார்.
இந்த அனுபவத்தை அவர் பாடமாக எடுத்து, பிறருக்கு வழிகாட்டும் வகையில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். அந்தரங்கம் அன்லிமிடெட் நிகழ்ச்சியில், முதல் முறை உறவு, முத்தத்தின் முக்கியத்துவம், காமசூத்ரா, மாதவிடாய் நிறுத்தம், ஆண்களின் நெருக்கமான சுகாதாரம் போன்ற பல தலைப்புகளை அவர் விவாதித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி, இளைஞர்கள் தவறான ஆதாரங்களிலிருந்து தகவல்களை பெறுவதை தவிர்க்க, சரியான வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரேஷ்மாவின் இந்த வெளிப்படையான பேச்சு, பாலியல் ஆரோக்கியம் குறித்து தமிழ் சமூகத்தில் திறந்த உரையாடலை ஊக்குவிக்கிறது. இந்த பாட்காஸ்ட், புரிதல் மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியாக, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரேஷ்மா பசுபுலேட்டி பகிர்ந்து பல விஷயங்களை தொடர்ந்து நம்முடைய தமிழகம் டாட் காம் தளத்தில் படிக்க இணைந்திருங்கள்.