கல்லூரியை விற்க இது தான் உண்மையான காரணம்.. அது சுத்த பொய்.. பிரபல நடிகர் பகீர் தகவல்!


கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய தாய் தந்தை பெயரில் ஆரம்பித்த ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வேறொரு கல்வி நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது. இதனை குறிப்பிட்ட கல்வி நிறுவனமே பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் அதற்குண்டான அதிகாரப்பூர்வமாக விளம்பரப்படுத்தியும் இருந்தது. 

இதை தொடர்ந்து கேப்டன் குடும்பத்திற்கு இந்த கல்லூரியை விற்கும் அளவுக்கு பண பிரச்சினை வந்துவிட்டதா..? இந்த கல்லூரியை இப்படி விற்பனை செய்ய காரணம் என்ன..? கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய அம்மா அப்பாவின் நினைவாக அவர்களுடைய பெயரில் கட்டிய ஒரு கல்லூரியை ஒரு சென்டிமென்ட் காரணமாக கூட பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பராமரித்திருக்க வேண்டாமா..? இப்படி விற்பனை செய்ய வேண்டிய காரணம் என்ன..? என்று அடுக்கடுக்கான கேள்விகள் சமூக வலைதள பக்கங்களில் எழுந்து வந்தது. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். 

அவர் கூறியதாவது, பலரும் ஒரு சென்டிமென்ட் காக கூட இந்த கல்லூரியை விஜயகாந்த் குடும்பமே நடத்தி இருக்கலாம். அதனை விற்க வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறுகிறார்கள். 

ஏனென்றால் ஏழு தலைமுறைக்கு தேவையான சொத்தை விஜயகாந்த் சம்பாதித்து வைத்திருக்கிறார். பல இடங்களில் நிலம் வாங்கி போட்டிருக்கிறார். இது எனக்கு நன்றாக தெரியும். அப்படியே ஏதேனும் பணக்கஷ்டம் வந்தாலும் கூட அப்படி அவர் வாங்கி போட்ட வேறு ஏதாவது நிலத்தை அல்லது சொத்தை விற்பனை செய்து அந்த பணக்கஷ்டத்தை தீர்த்து இருக்கலாம். 

அப்படி இருக்கும் போது, இந்த கல்லூரியை விற்பனை செய்திருக்கக் கூடாது என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், கல்லூரியை விற்பனை செய்வதற்கு காரணம் பணக்கஷ்டம் ஒரு காரணமே கிடையாது. 

உண்மையான காரணம் என்னவென்றால் அந்த கல்லூரியை அவர்களால் நிர்வாகம் செய்ய முடியவில்லை. இப்போது அல்ல விஜயகாந்த் இருக்கும்போதே அந்த கல்லூரியை நிர்வாகம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டார்கள். 

அது மட்டுமில்லாமல் கல்லூரி என்பது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் மூலம் லாபம் வர வேண்டும். ஆனால், இந்த கல்லூரியின் மூலம் கேப்டன் அவர்களுடைய குடும்பத்திற்கு எந்த லாபமும் வருவது கிடையாது. 

இதன் காரணமாக அதனை நிர்வாகம் செய்வதிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இப்படி நிர்வாக சிக்கல்களை கட்டுப்படுத்த முடியாமல் அந்த கல்வி நிறுவனத்தால் வருடா வருடம் வரக்கூடிய நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல். இந்த கல்லூரியை விற்பனை செய்து விடுவது என்ற முடிவுக்கு விஜயகாந்த் குடும்பம் வந்திருக்கிறது. 

தவிர, பணக்கஷ்டம்.. அதனால்தான் இந்த கல்லூரியை விற்றார்கள் என்பதெல்லாம் சுத்த பொய் என பதிவு செய்திருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்