பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார், ‘மிஸ்டர் & மிஸஸ்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய ஜோவிகா, “இந்தப் படத்தை நான் எனது சொந்தப் பணத்தில், உழைத்து சம்பாதித்த பணத்தில் எடுத்துள்ளேன்” என்று மேடையில் உருக்கமாகப் பேசி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இந்தப் படத்தில் வனிதா விஜயகுமார் நடித்து, இயக்கியுள்ளார், மேலும் ராபர்ட் மாஸ்டர், ஷகீலா, பாத்திமா பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜோவிகாவின் இந்தக் கூற்று இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சில ரசிகர்கள், வனிதா தனது பாசத்தால் படத்தை எடுத்து, மகள் ஜோவிகாவின் பெயரை தயாரிப்பாளராக பயன்படுத்தியிருக்கலாம் என யூகித்தனர்.
ஆனால், ஜோவிகா தனது உழைப்பால் சம்பாதித்த பணத்தில் படத்தை தயாரித்ததாகக் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“21 வயதில் எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தார்? என்ன வேலை செய்து இவ்வளவு பெரிய படத்தை எடுத்தார்?” என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தப் படம் காமெடி கலந்த ரொமான்டிக் கதையாக உருவாகியுள்ளதாகவும், ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.