நடிகை கயாடு லோகர் உள்ளிட்ட சில சினிமா நடிகைகளுக்கு இரவு நேர பாட்டிகள் கலந்து கொள்வதற்காக 35 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதை கொடுத்தது டாஸ்மாக் ஊழலில் இடைத்தரகர்களாக செயல்பட்ட நபர்கள் அவர்களை தம்பிகள் என்று டாஸ்மாக் வட்டாரத்தில் அழைக்கிறார்கள். டாஸ்மாக்கில் கொள்ளை அடிக்கப்படும் பணத்திற்கும் அந்த பணம் சென்று சேரக்கூடிய இடத்திற்கும் இடையில் வேலை செய்யக்கூடிய இடைத்தரகரங்களாக இருக்கும் இந்த தம்பிகள் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து இருக்கிறார்கள்.
இந்த பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குடி. கூத்து. கும்மாளம். படம் எடுப்பது. நடிகைகளுக்கு செலவு செய்வது. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது. கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு கைக்கடிகாரம் வாங்குவது என சுகபோகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது குற்றச்சாட்டு.
இந்த விவகாரம் அடுத்தடுத்த நாட்களில் பூதாகரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க பிரபல அரசியல் பிரமுகர் திருச்சி சூர்யா சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, ஒரு நடிகைக்கு 35 லட்சம் ரூபாய் செலவு செய்து விட்டார்கள் என்று பெரிய விஷயமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களைப் பொறுத்தவரை இதெல்லாம் சாதாரண விஷயம்.
ஒரு பார்ட்டி நடக்கக்கூடிய இடத்திற்கு திடீரென முப்பதுக்கு மேற்பட்ட மாடல் அழகிகள் கல்லூரி பெண்கள் நடிகைகள் வருகிறார்கள் என்றால் அந்த இடத்திற்கு இந்த டாஸ்மாக் உடலில் சம்பந்தப்பட்டிருக்கும் தம்பிகள் எனக் கூறப்படும் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ஜுஜூ போன்றவர்கள் அந்த பாட்டிக்கு வரப் போகிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதற்காக 30க்கும் மேற்பட்ட பெண்களை ஒரே நேரத்தில் பார்ட்டிக்கு அழைத்து வருகிறார்கள் என்றால் அவர்களை வடிகட்டுவதற்கு.
எந்த பபெண் எப்படியான ஒத்துழைப்பு கொடுக்கிறார். எந்த பெண் எந்த எல்லை வரை அனுமதிக்கிறாள். எந்த பெண் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்கிறாள். இப்படி பெண்களை வடிகட்டி வகைப்படுத்தி அவர்களை அடுத்தடுத்து தேவைப்படும் விஷயங்களுக்கு பயன்படுத்த தங்களுடன் வைத்துக் கொள்வார்கள்.
இப்படி பார்ட்டியில் கலந்து கொள்ள வரக்கூடிய நடிகைகளுக்கு கொடுக்கப்படக்கூடிய ரிட்டன் கிப்ட் தான் 35 லட்சம் ரூபாய். ஆனால், இதை பெரிய விஷயமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை விட மிகப் பெரிய விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. இந்தியாவிலேயே இல்லாத போதை வஸ்துக்கள் இவர்களிடம் அசாதாரணமாக புழங்கும். ஒரு பார்ட்டிக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்வார்கள். அவை அனைத்தையும் ஒரே ஒரு வெளிநாட்டு கிரெடிட் கார்டு மூலம் செட்டில் செய்து விட்டு சென்று விடுவார்கள். அவ்வளவு சாதாரணமாக இந்த விஷயங்கள் எல்லாம் நடக்கும் என பதிவு செய்திருக்கிறார். இதை கேட்ட இனவாசிகள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.