புதிய 500 ரூபாய் தாள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!


சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி ஒன்று, 500 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2026 முதல் செல்லாது எனவும், அரசு இந்த நோட்டுகளின் அச்சடிப்பை நிறுத்திவிட்டதாகவும் கூறியது. 

இந்த தகவல் ‘CAPITAL TV’ என்ற யூடியூப் சேனலில் வெளியான 11 நிமிட வீடியோவால் வைரலானது, இது 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. 

இதனால், பொதுமக்கள் மத்தியில் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டது. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) இந்தக் கூற்றை திட்டவட்டமாக மறுத்துள்ளன. 

500 ரூபாய் நோட்டுகளை நிறுத்துவதற்கு எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும், இவை தொடர்ந்து செல்லுபடியாகும் நாணயமாக இருக்கும் எனவும் PIB தெளிவுபடுத்தியுள்ளது. 

மக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்பவோ, பகிரவோ கூடாது எனவும், அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து செய்திகளை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும், ஆர்பிஐ வங்கிகளுக்கு அளித்த அறிவுறுத்தல், செப்டம்பர் 2025-க்குள் 75% ஏடிஎம்களிலும், மார்ச் 2026-க்குள் 90% ஏடிஎம்களிலும் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அதிகளவில் வழங்க வேண்டும் என்பது மட்டுமே. 

இது சிறிய மதிப்பு பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காகவே, 500 ரூபாய் நோட்டுகளை நிறுத்துவதற்காக அல்ல. 2016-ல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டபோது, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி அறிவித்தார். 

ஆனால், தற்போது எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. மக்கள் வதந்திகளை நம்பாமல், ஆர்பிஐ மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் பின்பற்ற வேண்டும்.

--- Advertisement ---