தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திரையுலகில் ‘பிதாமகன்’, ‘உயிர்’, ‘தனம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற சங்கீதா கிரிஷ்,
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முதல் கணவர் கிரிஷ் (பின்னணிப் பாடகர்) பற்றி கலகலப்பான அனுபவத்தைப் பகிர்ந்து, ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

2009-ல் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஷிவியா என்ற மகள் உள்ளார்.
ஒருமுறை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் இவரை பற்றி அதிகமாக கூகுள் செய்யப்பட்ட விஷயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில், சங்கீதாவின் முதல் கணவர் யார்? என்ற கேள்வி ரசிகர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்டதை காட்டி சங்கீதாவின் பதில் கோரப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை சங்கீதா, அடப்பாவிங்களா.. எனக்கு ஒரு ஒரு கல்யாணம் தான் நடந்துச்சு.. அதுவும் கிரிஷ் உடன் தான். அவர் தான் என் முதல் கணவர் என கூறினார்.
பேட்டியில் சங்கீதா கூறியதாவது: “என் கணவர் கிரிஷ், என்னைப் பாடச் சொல்லி நிறைய முறை ‘கொடுமை’ செய்திருக்கிறார்.
ஒரு முறை, ‘உனக்கு ஏன் பாட்டு வரல? வாய் மட்டும் நல்லா பேசுது!’ என்று சொல்லி, என் முடியைப் பிடித்து சுவற்றில் அழுத்தி, பாட்டு பாடச் சொன்னார். அதை போனில் ரெக்கார்ட் செய்து, கேலி செய்து கொடுமைப்படுத்தினார்!” இதை நகைச்சுவையாக பகிர்ந்த சங்கீதா, தங்கள் உறவில் இதுபோன்ற ஜாலியான தருணங்கள் இருப்பதாகவும் கூறினார்.
பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு அளித்த இந்தப் பேட்டியில், சங்கீதா தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்களையும், கிரிஷுடனான புரிதலைப் பற்றியும் பேசினார். “நாங்கள் இருவரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறோம்,” என்று உருக்கமாக குறிப்பிட்டார். இந்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே சிரிப்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
English Summary: Actress Sangeetha Krish, in a recent interview, humorously shared how her husband, singer Krish, teased her by pulling her hair and recording her singing attempts, jokingly “torturing” her to sing better. The lighthearted anecdote from their married life went viral, earning laughs and appreciation from fans.