நடிகர் ஸ்ரீகாந்த், கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது திரை வாழ்க்கையில் தவறவிட்ட பிளாக்பஸ்டர் பட வாய்ப்புகள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஸ்ரீகாந்த், 2001இல் ரோஜாக் கூட்டம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். ஆனால், அதற்கு முன்பே அவருக்கு 12பி படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது.

சில காரணங்களால் அந்த வாய்ப்பு நழுவ, அந்தப் படத்தில் நடிகர் ஷியாம் அறிமுகமாகி, அவருக்கு முதல் படமாக 12பி அமைந்தது. இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதேபோல், லிங்குசாமி இயக்கத்தில் 2002இல் வெளியான ரன் திரைப்படத்தில் மாதவன் நடித்து மாபெரும் வெற்றி பெற்றார். ஆனால், இந்தப் படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க அணுகப்பட்டவர் ஸ்ரீகாந்த் தான்.
அவர் இந்த வாய்ப்பை மறுத்ததால், மாதவனுக்கு அந்தப் பாத்திரம் கிடைத்து, ரன் தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. மேலும், மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றான ஆயுத எழுத்து (2004) திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் ஸ்ரீகாந்த் தவறவிட்டார்.
இப்படத்தில் மாதவன், சூர்யா, சித்தார்த் உள்ளிட்டோர் நடித்து, படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து M.குமரன் s/o மகாலட்சுமி, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன், பாலாவின் நான் கடவுள், கே.வி.ஆனந்தின் அயன், சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, விஜய்யின் காவலன் போன்ற படங்களையும் தவற விட்டுள்ளார்.
இந்த தவறவிட்ட வாய்ப்புகள், ஸ்ரீகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக இருந்திருக்கலாம் என ரசிகர்கள் விவாதிக்கின்றனர்.
ரோஜாக் கூட்டம், நண்பன், பரத் என்னும் நான் போன்ற படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டாலும், இந்த பிளாக்பஸ்டர் படங்களில் நடிக்க முடியாமல் போனது அவரது வெற்றி பயணத்தை பாதித்திருக்கலாம்.
தற்போது, போதைப் பொருள் வழக்கில் சிக்கியிருப்பது அவரது பிம்பத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம், திரைத்துறையில் தவறான முடிவுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
ஸ்ரீகாந்த் தனது தவறை உணர்ந்து, மகனை கவனிக்க வேண்டி ஜாமீன் கோரிய மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரது எதிர்கால திரைப் பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.
Summary in English : Amid Srikanth’s arrest in a cocaine case, reports reveal he missed blockbuster roles in 12B, Run, and Aayutha Ezhuthu. Initially approached for these films, his rejections led to Shaam and Madhavan starring in them, impacting his career trajectory, now further marred by legal troubles.