பாகுபலி ஆடிஷனில் கலந்துகிட்டேன்.. ஆனால்.. ராஜமௌலியின் நண்பர்.. ரகசியம் உடைத்த ராஷி கண்ணா!


ராஷி கண்ணா, இந்திய சினிமாவில் தனது பயணத்தை 2013-ம் ஆண்டு ‘மெட்ராஸ் கஃபே’ என்ற இந்தி படத்தில் தொடங்கினார். இது ஒரு அரசியல் ஆக்ஷன் திரில்லர் படமாகும். 

இதில் ஜான் ஆபிரகாமின் மனைவி ரூபி சிங் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இயக்குநர் ஷூஜித் சர்க்கார், இந்திய பத்திரிகையாளர் தோற்றத்தில் ஆங்கில உச்சரிப்புடன் நடிக்கக்கூடிய ஒரு நடிகையைத் தேடினார். 

ராஷியின் தோற்றமும் நடிப்புத் திறனும் அவருக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது, ராஷியின் சிறிய பாத்திரமும் கவனிக்கப்பட்டது. 

‘மெட்ராஸ் கஃபே’க்குப் பிறகு, ராஷி தென்னிந்திய சினிமாவை நோக்கி பயணித்தார். அவரது முதல் தெலுங்கு படமான ‘ஊஹலு குசகுசலடே’ (2014) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

இதில் அவரது அழகும் நடிப்பும் பாராட்டப்பட்டு, தெலுங்கு ரசிகர்களிடையே பிரபலமாகினார். அதே நேரத்தில், அவர் ‘பாகுபலி’ படத்தில் தமன்னா நடித்திருந்த அவந்திகா என்ற கதாபாத்திரத்திற்கான ஆடிஷனில் கலந்து கொண்டார். 

ஆனால், பாகுபலி இயக்குநர் ராஜமௌலி அவரை “நீங்க அழகாகவும் மென்மையாகவும்” இருக்கீங்க.. அந்த பாத்திரத்திற்கு பொருந்த மாட்டீர்கள் என கூறினார். அப்போது கொடுமையாக இருந்தது.. தாங்க முடியாத வலி.. அதை புரிந்து கொண்ட இயக்குனர் ராஜமௌலி தன்னுடைய நண்பர் தயாரிக்கும் ஒரு காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்று கொடுத்ததாக கூறினார் ராஷி கண்ணா.

இது அவரது தெலுங்கு சினிமா பயணத்தை மேலும் வலுப்படுத்தியது. பின்னர், ராஷி தமிழ் மற்றும் மலையாள சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார். ‘ஜெய் லவ குச’, ‘தோலி பிரேமா’ போன்ற படங்கள் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. 

தென்னிந்திய சினிமாவில் அவரது அழகும் நடிப்புத் திறமையும் ரசிகர்களை கவர்ந்தது. தனது பயணத்தில் ‘மெட்ராஸ் கஃபே’ மூலம் கிடைத்த அனுபவமும், தென்னிந்திய சினிமாவின் அன்பும் தன்னை வளர்த்ததாகக் கூறுகிறார் ராஷி கண்ணா. 

அவர் இன்னும் ராஜமௌலியுடன் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார், குறிப்பாக ஒரு நகைச்சுவை அல்லது அவரது பாணியில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--