தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா.
முன்னணி நடிகர்களுடன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தற்போது இந்தி திரையுலகில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
‘யோதா’, ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.
சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட ராஷி கண்ணா, உச்சகட்ட கிளாமர் உடையில் தோன்றி, விருது ஒன்றையும் பெற்றார்.
விழாவில் அவர் அணிந்திருந்த ஆடையும், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், “பாலிவுட் போனால் இப்படித்தான் மாறுவாங்களா?” என்று கிண்டலும் விமர்சனமும் தெரிவித்து, சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ராஷி கண்ணாவின் இந்த கிளாமர் தோற்றம், அவரது ரசிகர்கள் மத்தியில் ஒருபுறம் பாராட்டுகளை பெற்றாலும், மறுபுறம் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது.
இந்தி திரையுலகில் தனது பயணத்தை தொடர்ந்து வரும் ராஷி, இதுபோன்ற விவாதங்களுக்கு மத்தியில் தனது அடுத்த கட்ட படங்களில் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.