ரெட் லைட் ஏரியா? ஒரு மணி நேரத்துக்கு என்ன ரேட்? என் கூட படுப்பியா? அர்ச்சனா மகள் கொடுத்த பதிலடி..!


பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் ‘அன்பு கேங்க்’ அன்னையாக புகழ்பெற்ற தொகுப்பாளினி அர்ச்சனா, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். 

இவரது மகள் ஸாராவும், நெல்சன் இயக்கிய ‘டாக்டர்’ படத்தில் நடித்து, தற்போது சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்ஸராக வலம் வருகிறார். ஆனால், ஸாராவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு ஆபாச கமெண்ட்டுகள் குவிந்ததால், அவர் கடும் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சமீபத்தில், சேலை அணிந்து, கையில் ஹேண்ட்பேக் வைத்து, தனது தந்தை எடுத்த புகைப்படங்களை ஸாரா பதிவிட்டார். இந்த புகைப்படங்களுக்கு, “ரெட் லைட் ஏரியா, ஒரு மணி நேரத்துக்கு ரேட் என்ன, ரோட்டில் நிற்கும் விபச்சாரி போல இருக்கிறாய்” போன்ற ஆபாச கமெண்ட்டுகள் வந்தன. 

இதனால் கோபமடைந்த ஸாரா, “சேலை கட்டியிருந்தாலும் இப்படி கமெண்ட்டுகள் வருகிறதா? இந்த புகைப்படங்களை எடுத்தவர் என் அப்பா. இரவு உணவு முடிந்து திரும்பும்போது எடுத்தவை. இப்படி கமெண்ட்டுகள் செய்பவர்களின் வீட்டுப் பெண்களின் நிலை என்னவாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது,” என பதிவிட்டார். 

பிக் பாஸ் சீசன் 4-ல் அர்ச்சனாவுக்கு எதிராக வந்த ட்ரோல்களுக்கு ஸாரா பதிலடி கொடுத்து, அர்ச்சனாவுடன் இணைந்து நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருந்தார். அந்த சீசனின் வெற்றியாளர் ஆரி அர்ஜுனனும், முகம் தெரியாதவர்களின் ஆபாச கமெண்ட்டுகளைக் கண்டித்து பேசியிருந்தார். 

தற்போது ஸாரா, “இத்தகைய கோழைகளை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும். சைபர் புல்லிங்கை அப்படியே விட்டுவிடக் கூடாது,” எனக் கோரிக்கை விடுத்துள்ளார். 

சமூக வலைதளங்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படும்போது, பலர் இன்ஃப்ளூயன்ஸர்களாக கோடிகளில் சம்பாதிக்கின்றனர். ஆனால், கவர்ச்சியான உடைகளில் பதிவிடும் பெண்களுக்கு சைபர் புல்லிங் தொடர்ந்து தொல்லையாக உள்ளது. 

இதை எதிர்க்கும் ஸாராவின் இந்த பதிவு, சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்