இன்று, ஜூன் 12, 2025 அன்று, அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த விபத்தில் 133 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். மேலும், விமானம் விழுந்த மருத்துவ கல்லூரி மெஸ் உள்ளே மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த பலர் உயிரிழந்துள்ளாத தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்களின் குடும்பத்தினருக்கு தமிழகம் டாட் காம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த கட்டான சூழலில், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
விபத்துக்கான காரணங்கள்: திடீரென வேகம் குறைந்த விமானம்
விமான விபத்து நடைபெற்றதற்கான முதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, விமானம் பறக்கும் போது குறிப்பிட்ட நேரத்தில் தேவையான வேகத்தை அடைய முடியாமல் தடுமாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக விமானம் மேலே எழும்புவதில் சிக்கல் ஏற்பட்டு, திடீரென அதன் வேகம் குறைந்துள்ளது. விமானிகள் இதை சரி செய்ய முயற்சி செய்துள்ளனர், ஆனால் விமானம் தனது வேகத்தை மீண்டும் அதிகரிக்க முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது.
இறுதியில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி தகவல்: 11 ஆண்டு பழமையான விமானம் மற்றும் பராமரிப்பு பிரச்னை இந்த விபத்துக்கு மேலும் அதிர்ச்சி சேர்க்கும் வகையில், விபத்துக்குள்ளான விமானம் கடந்த 11 ஆண்டுகளாக சேவையில் இருந்து வந்த ஒரு போயிங் 787 ட்ரீம்லைனர் என்பது தெரியவந்துள்ளது.
அதிர்ச்சிகரமான தகவல் என்னவெனில், கடந்த சில மாதங்களாக இந்த விமானம் "பராமரிக்கப்பட வேண்டிய விமானங்கள்" பட்டியலில் சேர்க்கப்பட்டு, பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த தடை எப்போது நீக்கப்பட்டது மற்றும் விமானம் மீண்டும் பறக்க பொருத்தமானதா என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால், இந்த விமான விபத்து சம்பந்தமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
விசாரணைக்கான கோரிக்கை மற்றும் எதிர்காலம்
இந்த சோகமான சம்பவத்திற்கு பின்னர், விமானத்தின் பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்கள் இதற்கு உரிய பதிலை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டுமென்பதற்காக விமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது அவசியமாகும்.