திருமணத்திற்கு முன்பே உடலுறவு.. அதுவும் பகலில்.. இது தான் காரணம்.. அமலா பால் கன்றாவி பேச்சு!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால், தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். 

2010ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர், தலைவா (விஜய்யுடன்), வேலையில்லா பட்டதாரி (தனுஷுடன்) உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடந்த ஆண்டு (2024) வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம், அவரது நடிப்பில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

Amala Paul Jagat Desai love story pregnancy and motherhood interview

தனது நடிப்புத் திறமையால் மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அமலா பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், இவர்களுக்கு இலை என்ற மகன் உள்ளார். 

சமீபத்தில் அளித்த பேட்டியில், அமலா பால் தனது காதல், திருமணம் மற்றும் தாய்மை குறித்து வெளிப்படையாகப் பேசினார். “நான் ஜகத் தேசாயை சந்தித்த ஒரு மாதத்திலேயே கர்ப்பமாகிவிட்டேன். 

Amala Paul Jagat Desai love story pregnancy and motherhood interview

இரவு, பகல் பார்க்காமல் எங்கள் காதலை கொண்டாடியதன் விளைவு தான் கர்ப்பம். முதலில் கர்ப்பமானேன், பின்னர் திருமணம் செய்து கொண்டோம்,” என்று அவர் தெரிவித்தார். தனது மகன் இலை குறித்து பேசிய அமலா, “இலை எங்கள் வாழ்க்கையில் வந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. 

குழந்தைக்காக நாங்கள் எங்கள் ஈகோவை உடைத்து தூக்கி எறிந்துவிட்டோம். இலை எங்கள் உறவை மேலும் பலப்படுத்தியுள்ளான். இந்த உறவை நான் ‘டிவைன்’ (தெய்வீகம்) என்று அழைக்கிறேன்,” என்றார். 

Amala Paul Jagat Desai love story pregnancy and motherhood interview

மேலும், “இலை வந்த பிறகு, நான் இவ்வளவு பொறுமையாக இருப்பேனா என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில், எனக்கு பொறுமை என்றால் என்னவென்றே தெரியாது. 

என் அண்ணன் கூட, ‘நீ இவ்வளவு பொறுமையாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன்’ என்று சொன்னார்,” என்று நகைச்சுவையுடன் கூறினார். அமலா பாலின் இந்த பேட்டி, சசமூக ஊடகங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Amala Paul Jagat Desai love story pregnancy and motherhood interview

அவரது எளிமையான பேச்சும், தாய்மை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த வெளிப்படையான கருத்துகளும் பலரையும் கவர்ந்துள்ளன. தற்போது, சினிமாவிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியுடன் வலம் வரும் அமலா பால், தனது அடுத்த படங்களின் மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கக் காத்திருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--