நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் கூட்டணி குறித்து அறிவிப்பை தன்னுடைய கட்சியினருக்கு வெளியிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதன்படி, டிசம்பர் மாத இறுதியில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறது தமிழக வெற்றி கழகம் என்று அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன..
இதற்கு முக்கியமான காரணம் நடிகர் விஜயின் ஜாதகம், ஜோதிடம் மீதான நம்பிக்கை தான் என்று கூறுகிறார்கள். டிசம்பர் வரை கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்று அவருக்கு நெருக்கமான ஜோதிடர்கள் அறிவுரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் தமிழக அரசியல் களத்தில் திமுகவை தவிர எந்த கட்சியினரையும் எந்த கட்சி தலைவர்களையும் எதிர்க்கும் விதமாக கருத்துக்களை பேச வேண்டாம், சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டாம், பேட்டிகளில் விமர்சிக்க வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவாக கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜயின் அரசியல் கட்சி 2026 தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும் என்ற நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்று விவாதங்கள் பறந்து கொண்டிருக்கின்றன.
மறுபக்கம் திமுகவுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் திமுகவுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவுக்கு இது பதற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதே சமயம் பிரபல யூட்யூபரும், சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாகுமான சவுக்கு சங்கர் நடிகர் விஜய்யின் தவெக கட்சியை தனித்து நிற்க வைக்க திமுக 20 ஆயிரம் கோடி வரை செலவு செய்ய தயாராக உள்ளது. அந்த வேலையை ஆதவ் அர்ஜுனா செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
தவெக கட்சியில் இணைந்த பிறகு நான்கு முறை பெரிய இடத்து மாப்பிள்ளை சபரீசன் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இதையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும் போது ஆதவ் அர்ஜுனா தவெகவை தனித்து போட்டியிட வைக்க அனைத்து முயற்சிகளையும் செய்வார்.
அதன் ஒரு பகுதி தான், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்களை ஒருமையில், கேலி, கிண்டல் பேசிய வீடியோவை தனக்கு தெரியாமல் படமாக்கப்பட்டது போல படமாக்கி வேண்டுமென்றே ரிலீஸ் செய்தது.
இந்த வீடியோ வெளியானால், அதிமுக, தவெக தொண்டர்கள் இடையே கருத்து மோதல் உருவாகும், அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமே இருக்காது என ஆதவ் எதிர்பார்த்தார்.
ஆனால், அவர் பேசியதை தவெக தொண்டர்களே தவறு என கண்டிக்க ஆரம்பித்து விட்டனர். தன்னுடைய ராஜதந்திரம் வீணாகி விட்டதை நினைத்து சோர்ந்து போயுள்ளார் ஆதவ். இதற்கு மேலும், தமிழக வெற்றிக்கழகம் தனித்து நிற்க தன்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்வார் என கூறியுள்ளார் சவுக்கு சங்கர்.
இதுவும் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.