கீர்த்தி சுரேஷ் கிட்ட இருந்து இதை திருட விரும்புறேன்.. கூச்சமின்றி கூறிய இளம் நடிகை!

பிரபல நடிகை வாமிகா கபி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷின் பணிவு குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். 

“கீர்த்தி சுரேஷிடமிருந்து அவருடைய பணிவை திருட விரும்புகிறேன்,” என்று வாமிகா கூறியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் தனது நடிப்பால் மட்டுமின்றி, தனது எளிமையான பண்பு மற்றும் பணிவான அணுகுமுறையாலும் புகழ் பெற்றவர். 

தேசிய விருது பெற்ற ‘மகாநடி’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில், ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி, தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

வாமிகா கபி, கீர்த்தியுடன் ‘பேபி ஜான்’ படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 

கீர்த்தியின் தொழில்முறை அணுகுமுறை மற்றும் எளிமையான பண்பு தன்னை வெகுவாக கவர்ந்ததாக அவர் குறிப்பிட்டார். “கீர்த்தியின் பணிவு ஒரு அற்புதமான பண்பு. 

அதை நானும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்,” என்று வாமிகா உருக்கமாக தெரிவித்தார். இந்த கருத்து, கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, திரையுலகில் பணிவு மற்றும் எளிமையின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--