நடிகர் ஸ்ரீகாந்த் கோகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவர் கோகைன் உபயோகித்தது உறுதியானதை அடுத்து, விசாரணை மற்ற நடிகர்கள், நடிகைகள் நோக்கி தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, நடிகை ஸ்ரீரெட்டியின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Red Pix 24x7 ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஸ்ரீரெட்டி, பல தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதில் ஸ்ரீகாந்தின் பெயரும் இடம்பெற்றது. ஸ்ரீரெட்டி கூறுகையில், “நான் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் விளம்பரம் தேடுவதாக சிலர் கூறுகின்றனர்.
ஆனால், இவை என்னையும் பாதிக்கின்றன. ஒரு பிரபல நடிகர், பட வாய்ப்பு தருவதாக அழைத்து, என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். மேலும், கோகைன் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தினார்.

நான் மறுத்தேன், முடியவே முடியாது என திமிறினேன். உடனே, அவரது நண்பர்கள் சிலரை வர வைத்து என் இரண்டு கால்களையும் ஆளுக்கு ஒரு பக்கமாக விரித்து பிடித்துக்கொண்டு.. என் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, என் உதட்டின் அடியில் கோகைனை தடவினர். அடுத்த நொடியே என் உதடுகள் மறத்துபோனது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் எங்கிருக்கிறேன், என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை. மறுநாள் மாலை வரை அந்த நிலையிலேயே இருந்தேன்.

அந்த நேரத்தில் அந்த நடிகர் என்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார்,” என்று திடுக்கிடும் வகையில் விவரித்தார். ஸ்ரீகாந்தின் கைது தொடர்பான செய்தி வெளியான நிலையில், ஸ்ரீரெட்டி குறிப்பிட்ட நடிகர் யார் என்பது குறித்த விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது.
இந்த வழக்கு தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : Actor Srikanth was arrested in Chennai for cocaine use, confirmed by medical tests. A viral interview by actress Sri Reddy, alleging a prominent actor forced her to use cocaine and assaulted her, has sparked debate linking it to Srikanth’s case, stirring Kollywood.