தமிழ் சினிமாவில் பணக்கார வீட்டு பெண்ணாகவும், நவநாகரிக உடைகளில் மாடர்ன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை அர்ச்சனா ஹரிஷ், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வித்தியாசமான ஆசையை வெளிப்படுத்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பேட்டியில் பேசிய அர்ச்சனா, "இதுவரை நான் பணக்கார கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன்.
ஆனால், எனக்கு லோக்கலான, கஞ்சா அடித்து வில்லத்தனமாக இருக்கும் ஒரு பெண் ரவுடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று பெரிய ஆசை உள்ளது.
அப்படி ஒரு பெண்ணாக மற்றவர்களை மிரட்டும் காட்சிகள் சூப்பராக இருக்கும். அத்தகைய வேடம் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்," என்று கூறினார்.
பொதுவாக நடிகைகள் அழகான, நவநாகரிக உடைகளில் நடிக்க விரும்புவது வழக்கம். ஆனால், அர்ச்சனா ஹரிஷ் இதற்கு நேர் மாறாக, முற்றிலும் உள்ளூர் பாணியில், துணிச்சலான ரவுடி கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டியிருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை அவருக்கு இப்படியான கதாபாத்திரங்கள் அமையவில்லை என்றாலும், அர்ச்சனாவின் இந்த தைரியமான விருப்பம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இனி வரும் படங்களில் அவரது ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!