அராஜகத்தின் உச்சம் : பாலியல் தொல்லை புகார் கொடுக்க வந்த கர்ப்பிணி.. கொடூரமாக தாக்கிய காவலர்!

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற ஐந்து மாத கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் ஒருவர் கொடூரமாக தாக்கியதாக வெளியான காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, காவல்துறையின் மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 

பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள், இந்த காணொளியை வெளியிட்டு, “குற்றவாளியிடம் கையூட்டு பெற்று, பாதிக்கப்பட்டவர்களை காவலர் தாக்கியது காவல்துறையின் மாண்பை கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஏழை கர்ப்பிணி பெண்ணை தாக்கும் அளவிற்கு மனிதாபிமானம் மலிந்துவிட்டதா? திராவிட மாடல் ஆட்சியில் நீதி எங்கு கிடைக்கும்?” என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, குற்றவாளி காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

இதேபோல், பல அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, நீதி கோரி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை.

Summary in English : A viral video shows a police officer brutally assaulting three women, including a five-month pregnant woman, at Kanakammachatram police station in Thiruvallur district for filing a sexual harassment complaint. BJP leader Thiru.Nainar Nagenthiran demands immediate action against the officer.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--