விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் ஜூன் 18 முதல் 21, 2025 வரையிலான ப்ரோமோ வெளியாகி, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், ரோகிணி திருட்டு நகையை வாங்கி விஜயாவுக்கு கொடுத்தது அம்பலமாகிறது. இதனால் கோபமடைந்த விஜயா, ரோகிணியை கடுமையாக அவமானப்படுத்தி தாக்குகிறார்.
இந்த சம்பவம் குடும்பத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது. சீரியலில், ரோகிணி பணக்கார வீட்டு மருமகள் இல்லை என்பது முத்து மூலம் தெரியவந்த பிறகு, விஜயா அவரை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்.
மனோஜை ரோகிணியிடமிருந்து விவாகரத்து செய்து, ரவியின் உரிமையாளர் நீத்துவுடன் இரண்டாவது திருமணம் செய்ய விஜயா திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், விஜயாவின் மனதை மாற்ற, ரோகிணி சிட்டியிடமிருந்து திருட்டு நகையை வாங்கி கொடுத்தார்.
ஆனால், சிந்தாமணியின் பிறந்தநாள் விழாவில், விஜயா அணிந்திருந்த நகையைப் பார்த்து, ஒரு பெண் அது தனது திருடப்பட்ட நகை எனக் கூற, அதில் அவரது கணவர் பெயர் இருப்பது உறுதியாகிறது.
இதனால் அவமானமடைந்த விஜயா, வீட்டுக்கு வந்து ரோகிணியை கடுமையாக திட்டி தாக்குகிறார். ஏற்கனவே ரோகிணியின் பொய்யை அறிந்த அண்ணாமலை, இனி எந்த உண்மையையும் மறைக்கக் கூடாது என எச்சரித்திருந்தார்.
இப்போது திருட்டு நகை விவகாரத்தில் ரோகிணி சிக்கியுள்ள நிலையில், அண்ணாமலை என்ன முடிவெடுப்பார்? ரோகிணியை வீட்டை விட்டு துரத்துவாரா? அல்லது நகையின் மூலத்தை விசாரிப்பாரா? மேலும், விஜயாவுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்த சாமியாரை வைத்து ரோகிணி பொய் சொன்னது விஜயாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சாமியார் விவகாரமும் வெளிப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது