சாய் பல்லவி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனது திறமையால் பாராட்டுகளைப் பெற்றவர். இப்போது அவர் தனது பாலிவுட் அறிமுகமாக புராணக்கதையான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் அவர் சீதை கேரக்டரை ஏற்றி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தத் திரைப்படம், அதன் விஷுவல் வெளிப்பாடு மற்றும் உயர்தர தயாரிப்பு மதிப்பால் இந்திய சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், இந்தப் படம் வெளியாகும் முன்பே சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சாய் பல்லவி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களைத் தூண்டியுள்ளது.
அந்த பேட்டியில், தனது வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக் திரைப்படம் உருவாக்கப்பட்டால் அதற்கு "50 Shades of Pallavi" என்று பெயர் வைப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் குறித்து பகிர்ந்துகொண்ட அவர், "ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டுகிறார்.
நானும் அதேபோல, எனது நண்பர்களுடன் இருக்கும்போது சிரித்து விளையாடி ஒரு மாதிரி இருப்பேன். ஆனால், சினிமா துறையில் தொழில்முறை ரீதியாக வேறு ஒரு முகத்தைக் காட்டுவேன்.
குடும்பத்தில் இருக்கும்போது மறுபக்கமாக இருப்பேன். இந்த பல நிறங்களைக் கொண்ட எனது தன்மையை பிரதிபலிக்கும் வகையில் '50 Shades of Pallavi' என்ற பெயரை நான் தேர்ந்தெடுத்தேன்" என்று விளக்கமளித்துள்ளார்.
இவரது இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை அவரது பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த விதமாக பார்க்கிறார்கள், அதேசமயம் சிலர் இந்த பெயர் தேர்வு சரியான பச்சோந்தித்தனம் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்று கருதுகின்றனர்.
சாய் பல்லவியின் இந்த புதிய பயணமும் அவரது தனிப்பட்ட பதில்களும் ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளன, மேலும் இது அவரது எதிர்கால திரைப்படங்களுக்கு மேலும் கவனம் செலுத்துவதற்கு வழிவகுத்துள்ளது.