தமிழ் சின்னத்திரையில் 90கள் மற்றும் 2000களில் பிரபலமாக ஒளிபரப்பான சீரியல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.
அந்த வகையில், சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடர், ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடல் மூலம் தாய்மார்களை தொலைக்காட்சி முன் கட்டிப்போட்டது.
இந்த தொடரில் ஐந்து அக்கா-தங்கைகளில் ஒருவராக நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரேவதி பிரியா. இயக்குநர் திருமுருகன் இயக்கிய இந்த தொடரில், டெல்லி குமாரின் மகள் பவானி கதாபாத்திரத்தில் ரேவதி முத்திரை பதித்தார்.
‘மெட்டி ஒலி’ மூலம் பிரபலமான ரேவதி, பின்னர் சன் டிவியின் ‘கோலங்கள்’ தொடரில் சுமதி கதாபாத்திரத்தில் நடித்து, மனநோயாளியாக மாறும் பாத்திரத்தில் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.
‘நிம்மதி’, ‘மேகலா’, ‘பாசம்’, ‘கிரிஜா எம்.ஏ’ உள்ளிட்ட தொடர்களிலும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து, தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே நன்கு அறியப்பட்டார்.
ரேவதி, ஞான முருகன் என்பவரை திருமணம் செய்து, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சமீபத்தில், ‘ராஜா பார்வை’ மற்றும் ‘பூவே பூச்சூடவா’ போன்ற தொடர்களில் நடித்து, மீண்டும் கவனம் ஈர்த்தார்.
தற்போது, ரேவதி பிரியாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, “இவரா ரேவதி?” என்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளன.
இந்த புகைப்படங்கள் அவரது நவீன தோற்றத்தை வெளிப்படுத்தி, ரசிகர்களிடையே பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.