என்னுடைய கணவரின் பெயர் இது தான்.. பிரியங்கா மோகன் ஓப்பன் டாக்!

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை பிரியங்கா மோகன், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு, ரசிகர்கள் கூகுளில் தேடிய கேள்விகளுக்கு சுவாரசியமாக பதிலளித்தார். 

‘டாக்டர்’, ‘டான்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற பிரியங்கா, தனது இயல்பான நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களை கவர்ந்தவர். 

என்னுடைய கணவரின் பெயர் இது தான்.. பிரியங்கா மோகன் ஓப்பன் டாக்! | Priyanka Mohan opens about her husband name

பேட்டியில், “பிரியங்கா மோகனின் கணவர் பெயர்” என்று ரசிகர்கள் அதிகம் தேடியதாக குறிப்பிடப்பட்டது. 

இதற்கு புன்னகையுடன் பதிலளித்த பிரியங்கா, “என்னுடைய கணவரின் பெயர் இதுதான் என்று எப்படி இப்போது சொல்வது? எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை!” என்று கூறி, அனைவரையும் சிரிக்க வைத்தார். 

இதனைத் தொடர்ந்து, தொகுப்பாளர், “உங்களுக்கு எப்படிப்பட்ட கணவர் வேண்டும்? உங்கள் எதிர்பார்ப்பு என்ன?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பிரியங்கா, “எனக்கு பாசமாக, அன்பாக, அக்கறையாக என்னை பார்த்துக்கொள்ளும் ஒருவர்தான் கணவராக வேண்டும். 

இதைத் தாண்டி வேறு எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை,” என்று எளிமையாக பதிலளித்தார். அவரது இந்த பதில், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

சமீபத்தில் ‘பிரதர்’ படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த பிரியங்கா, திரைப்படங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--