விமானத்தில் அந்த விஷயத்தை பார்த்தேன்.. அகமதாபாத் விமான விபத்தை படம் பிடித்த சிறுவன் பகீர்!

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே நிகழ்ந்த ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமான விபத்தை தற்செயலாக செல்போனில் படம்பிடித்த 17 வயது சிறுவன் ஆர்யன், தீப்பிழம்பை கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

2025 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில், விமானம் தாழ்வாக பறந்து விழுந்து ராட்சத தீப்பிழம்பு ஏற்பட்டது. இந்த அதிர்ச்சி காட்சிகள் உலகம் முழுவதும் வைரலாக பரவியுள்ளன. 

Ahmedabad plane crash video shot by 17-year-old boy Aryan

ஆர்யன், அகமதாபாத் விமான நிலையம் அருகே வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு சிறுவன். விமானம் அருகில் பறப்பதை தற்செயலாக பார்த்து செல்போனில் படம்பிடிக்கத் தொடங்கினான். 

ஆனால், அது திடீரென விழுந்து தீப்பிடித்ததை கண்டு பயந்து போனான். இந்த 24 நொடி வீடியோவை முதலில் அவன் தனது சகோதரியிடம் மிரட்டலுடன் காட்டியுள்ளான். 

பின்னர், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உலகளவில் கவனம் பெற்றது. விபத்தை முன்பே அறிந்து வீடியோ படம்பிடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், போலீஸார் ஆர்யனை விசாரணைக்கு அழைத்தனர். 

விமானத்தில் அந்த விஷயத்தை பார்த்தேன்..  

அவன் தனது தந்தையுடன் ஆஜராகி, “விமானத்தில் இருந்த சக்கரங்களை எல்லாம் பார்த்தேன்.. இதுவரை நான் இவ்வளவு அருகில் பார்த்ததில்லை.. மிகவும் அருகில் பறப்பதை முதன் முறையாக பார்த்தேன்.. எனவே உடனே வீடியோ எடுத்தேன்.. ஆனால், அது விழுந்து தீப்பிழம்பு ஏற்பட்டதை பார்த்து பயந்துவிட்டேன். இதை என் சகோதரி முதலில் பார்த்தாள்,” என்று தெரிவித்தான். 

போலீஸார் அவனை மற்றும் அவனது தந்தையை விசாரித்து விட்டு அனுப்பி வைத்தனர். ஆர்யனின் சகோதரி கூறுகையில், “விமான விபத்தை பார்த்து அவன் மிகவும் பயந்து போனான். சரியாக பேச முடியாமல் இருந்தான். ‘விமான நிலையம் அருகே இருப்பது ஆபத்து, வேறு இடத்துக்கு செல்லலாம்’ என்று கூறினான். எதுவும் சாப்பிடாமல், இரவு முழுவதும் தூங்காமல்.. என்னால முடியல.. நான் எங்கயாச்சும் போறேன்.. என்று தவித்தான்,” என்று தெரிவித்தார். 

இந்த சம்பவம் ஆர்யனின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--