குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே 2025 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி நிகழ்ந்த ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமான விபத்தில் உயிர் பிழைத்ததாக கூறப்படும் ரமேஷ் விஷ்வாஷ் என்பவரது புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த விபத்தில் விமானம் கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியதில் 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக, ரமேஷ் தப்பி உயிர் பிழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அவர் விமானத்திலிருந்து தப்பி கல்லூரியின் நுழைவாயிலை நோக்கி நடக்க முடியாமல் தடுமாறி செல்வதை பதிவு செய்துள்ள வீடியோ, பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில், ரமேஷ் தீப்பொறி மற்றும் சேதமடைந்த விமானத்தின் எச்சங்களுக்கு இடையே தடுமாறி நடப்பதும், உடலில் காயங்களுடன் நடக்க முடியாமல் தவிப்பதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
அவர் கல்லூரி நுழைவாயிலை நோக்கி செல்வதற்கு முயற்சிக்கும் காட்சிகள், அவரது உயிர் தப்பியது எவ்வளவு சவாலானதோ என்பதை உணர்த்துகிறது.
இந்த வீடியோவை பதிவு செய்தவர் யார் என்பது தெளிவாகவில்லை, ஆனால் இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரமேஷின் துணிவையும் அதிர்ஷ்டத்தையும் பாராட்டும் கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து தொடர்பாக அகமதாபாத் போலீஸ் மற்றும் DGCA விசாரணை நடத்தி வருகின்றன. ரமேஷின் உடல்நலம் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த வீடியோ, விமான விபத்தின் தீவிரத்தையும், உயிர் தப்பியவர்களின் போராட்டத்தையும் உலகிற்கு உணர்த்தியுள்ளது.
#JustNow || விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் - புதிய வீடியோ#AirCraft | #AeroPlane | #Crash | #ViralVideo | #PolimerNews pic.twitter.com/AIwW80bVYH
— Polimer News (@polimernews) June 16, 2025