விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி விஜே பிரியங்கா தேஷ்பாண்டே, தனது கலகலப்பான பேச்சு மற்றும் தனித்துவமான பாணியால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.
இவர் தொகுத்து வழங்கும் நீயா நானா, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தனது யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் சூட்டிங் காட்சிகள், குடும்ப வீடியோக்கள் என பலவற்றை பகிர்ந்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் 2025-ல் இலங்கை தமிழரான வசி சச்சி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் திருமணம் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது, ஆனால் இதைப் பற்றி பிரியங்கா வெளிப்படையாக பேசவில்லை.
இரண்டாவது திருமணத்திற்கு பிறகு, விஜய் டிவியை விட்டு விலகுவார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6-ல் “விஜய் டிவியில் எனக்கு எண்டே கிடையாது” என உறுதியாகக் கூறினார்.
இந்நிலையில், அவரது கணவர் வசி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு வெளியிட்டு, “மிஸ்ஸஸ் பிரியங்கா தேஷ்பாண்டே சச்சி, எப்போ வரீங்க?” என பிரியங்காவை பிரிந்திருப்பதாகக் குறிப்பிட்டு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினார்.
பின்னர், பிரியங்காவுக்கு காலில் காயம் ஏற்பட்டு, அவர் தனது அம்மா வீட்டில் இருப்பது தெரியவந்தது. சமீபத்தில், வசி மற்றொரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
அதில், காயம் காரணமாக வீல்சேரில் விமான நிலையத்தில் வரும் பிரியங்காவை மாஸாக எடிட் செய்து, “வந்துட்டாப்புல வந்துட்டாப்புல” என குறிப்பிட்டு பதிவிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் பலரும் பிரியங்காவின் நலம் விசாரித்து வருகின்றனர். இந்த வீடியோ மற்றும் பிரியங்காவின் தொடர்ச்சியான சமூக வலைதள பதிவுகள் அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.