மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன், 2015இல் சகாப்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் மதுர வீரன் (2018) படத்தில் நடித்த அவர், ஏழு ஆண்டுகள் கழித்து படைத்தலைவன் படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றியுள்ளார்.
அறிமுக இயக்குநர் உ. அன்பு இயக்கிய இப்படத்தில் யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முக்கிய ஹைலைட்டாக, AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தின் தோற்றம் உருவாக்கப்பட்டு, ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தியது.
ஜூன் 13, 2025இல் வெளியான படைத்தலைவன், வனப்பகுதி மக்களின் வாழ்க்கையையும், யானைகளுடனான பிணைப்பையும் மையமாகக் கொண்டது.
இளையராஜாவின் இசை, எஸ்.ஆர். சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பலம் சேர்க்கின்றன. மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 1.4 கோடி வசூல் செய்து, மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஜயகாந்தின் AI தோற்றம் மற்றும் சண்முகபாண்டியனின் நடிப்பு ரசிகர்களை கவர, வசூல் படிப்படியாக உயர்ந்து வருகிறது.