விஜய் டிவியின் பிரபல சீரியல் ‘பாக்கியலட்சுமி’ மூலம் புகழ்பெற்ற நடிகை நேஹா, இனியா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் அங்கீகாரம் பெற்றவர்.
ஆரம்பத்தில் அவரது கதாபாத்திரம் கொண்டாடப்பட்டாலும், சமீபத்தில் சீரியலில் ஆடிய நடன வீடியோவிற்காக சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.

இதற்கு பதிலடியாக, நேஹா தனது இன்ஸ்டாகிராமில் வேடிக்கையான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், சந்தானத்தின் பாணியில் காமெடியாக, “அய்யய்யோ, இவரு மூஞ்சிய பாத்தியா? இப்படி ஒரு மூஞ்சி! சோப்பு விளம்பர மாடல் மாதிரி இருக்காரு. குரங்கு கடிச்ச கொய்யாக்கா மாதிரி மூஞ்சி வச்சுட்டு என் மூஞ்ச குறை சொல்றாங்க!” என்று பேசி, தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நகைச்சுவையாக பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ, ‘நேஹாவை ட்ரோல் செய்தவர்களுக்கு’ என பதிவிடப்பட்டு, ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
சிலர் அவரது தைரியத்தையும் நகைச்சுவை உணர்வையும் பாராட்ட, மற்றவர்கள் இதனையும் ட்ரோல்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
English Summary: Vijay TV’s Baakiyalakshmi actress Neha, known for her role as Iniya, faced heavy trolling for a dance video in the serial. In response, she posted a humorous Instagram reel, mimicking comedian Santhanam, mocking her trolls’ appearances, which has gone viral among fans.