முதலிரவில் நான் பட்ட கஷ்டம்! கொடுமை! கூச்சமின்றி வெளிப்படையாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். 

ஜீ தமிழில் ‘கார்த்திகை தீபம்’ தொடரில் சாமுண்டீஸ்வரி என்ற ஆண்களை அடக்கி ஆளும் தாயாக நடித்து வருகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய ரேஷ்மா, ‘பிக்பாஸ் தமிழ் 3’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார். 

தற்போது, மிர்ச்சி பிளஸ் ஆப் மற்றும் கானா இணையதளத்தில் ஒளிபரப்பாகும் ‘அந்தரங்கம் அன்லிமிடெட்’ என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, தாம்பத்திய உறவு மற்றும் பாலியல் ஆரோக்கியம் குறித்து பகிர்ந்துள்ளார். 

இதில், “தாம்பத்திய உறவில் ஆண்களின் பொறுமை மிகவும் முக்கியம். காஞ்ச மாடு கம்பங்காட்டில் புகுந்தது போல நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை. 

Actress Reshma Pasupuleti Antarangam Unlimited podcast relationship wellness advice

முன் விளையாட்டு மற்றும் பொறுமை மகிழ்ச்சியான உறவுக்கு அவசியம்,” என்று அவர் தெரிவித்தார். மேலும், தனது முதல் திருமணத்தில் பொறுமையின்மை காரணமாக சவால்களை எதிர்கொண்டதாகவும், முதலிரவில் கஷ்டப்பட்டதாகவும் உருக்கமாக பகிர்ந்தார். 

இந்த அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்து, இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதற்காக இதனை பகிர்ந்ததாக கூறினார். ரேஷ்மாவின் இந்த திறந்த பேச்சு, பாலியல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. 

இந்த பாட்காஸ்ட், தமிழ் சமூகத்தில் பேசப்படாத தலைப்புகளை உரையாடலுக்கு கொண்டு வந்து, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--