சிரிக்க வைக்கும் நடிகையின் கொடுமையான பக்கம்.. விவாகரத்துக்கு என்ன காரணம்?

தமிழ் சினிமாவில் வடிவேலு உடன் இணைந்து ‘மருதமலை’, ‘காதல் கிறுக்கன்’ உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியவர் பிரியங்கா. 

“ஏட்டைய்யா, ஃப்ரீயா இருந்தீங்கனா வீட்டுப்பக்கம் வாங்க” என்ற ‘ஐந்து புருஷன்’ காமெடி காட்சி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தவர். 

திருமணத்திற்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி, குழந்தைகளை வளர்த்து வந்தார். 

சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ சீரியலில் ‘அகல்யா’ என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். யூடியூப் பேட்டி ஒன்றில் மனம் திறந்த பிரியங்கா, “திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகினேன். 

ரசிகர்களும், குழந்தைகளும் மீண்டும் நடிக்க வற்புறுத்தியதால் திரும்பினேன். ஆனால், சினிமாவில் பல மாற்றங்கள் வந்துவிட்டன. தற்போது சினிமா வாய்ப்புகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளன,” என்றார். 

மேலும், “என் திருமண வாழ்க்கை சரியாக இல்லை, அதனால் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். என் அம்மாவிற்கு புற்றுநோய் சிகிச்சைக்கு பெரும் பணம் தேவைப்படுகிறது,” என்று உருக்கமாகக் கூறினார். 

சினிமாவில் நகைச்சுவையால் அனைவரையும் மகிழ்வித்தாலும், பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை சோகம் நிறைந்ததாக உள்ளது. 

அவரது பயணத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

English Summary: Comedian actress Priyanka, known for her iconic roles with Vadivelu, revealed in a YouTube interview her decision to divorce due to an unhappy marriage. She’s also funding her mother’s cancer treatment while making a comeback in Kannathil Muthamittal serial and eyeing cinema roles.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--