குசும்பு Max.. ஜன நாயகன் புதிய போஸ்டரில் அதை கவனித்து.. ஷாக் ஆன ரசிகர்கள்..

நடிகர் விஜய்யின் 69-வது மற்றும் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’, இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், அரசியல் கருப்பொருளுடன் உருவாகி வருகிறது. 

இப்படத்தின் முதல் பாடல், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22, 2025 அன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் வெளியான போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

jananayagan first single download

போஸ்டரில், முழு சூரியனை பின்னணியாகக் கொண்டு, மக்கள் இருளில் மூழ்கியிருப்பதை குறியீடாக, சூரியன் இருந்து விடியவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைப்பு அமைந்துள்ளது. 

இதில், விஜய் தனது வலது கையை உயர்த்தி, சூரியனை மறைப்பது போல நிற்கிறார், இது அரசியல் குறியீடாகவும், மக்களை இருளில் இருந்து விடுவிக்கும் தலைவனாகவும் அவரை சித்தரிக்கிறது. 

jananayagan first single download

இதை கவனித்த ரசிகர்கள், “குசும்பு Max” என்று கலகலப்பான கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த குறியீடு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழக (TVK) கட்சியின் அரசியல் பயணத்துடன் தொடர்புடையதாகவும், ஆளும் அரசுக்கு எதிரான கருத்துகளை பிரதிபலிக்கும் எனவும் ரசிகர்கள் ஊகிக்கின்றனர். 

எச். வினோத், பாடல் வரிகளை பாராட்டி, “தீயா இருக்கு, மெய்சிலிர்க்கிறது!” என்று கூறியது, இந்த பாடலில் அரசியல் கருத்துக்கள் இடம்பெற்றிருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது. 

அனிருத் இசையில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்க, 2026 ஜனவரி 9-ல் வெளியாகவுள்ள இப்படம், விஜய்யின் அரசியல் நுழைவுக்கு முன் ஒரு மைல்கல்லாக அமையும்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--