குவால்காம் நிறுவனத்தின் புதிய Snapdragon 8s Gen 4 சிப்செட், மலிவு விலை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
TSMCயின் 4nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இது, 31% வேகமான CPU, 49% சக்திவாய்ந்த GPU மற்றும் 44% மேம்பட்ட AI செயல்திறனை வழங்குகிறது.

இதன் Kryo CPU, 1 Cortex-X4 (3.2GHz), 3 Cortex-A720 (3.0GHz), 2 Cortex-A720 (2.8GHz) மற்றும் 2 Cortex-A720 (2.0GHz) கோர்களைக் கொண்டது.
Adreno 825 GPU, ரே-ட்ரேசிங், Snapdragon Elite Gaming அம்சங்களுடன் கேமிங்கை மேம்படுத்துகிறது.
இதன் Hexagon NPU, பலமொழி மற்றும் மல்டிமோடல் AI ஆதரவுடன், LLMகளை ஆன்-டிவைஸில் இயக்குகிறது.
18-bit Triple ISP, 320MP கேமராக்களை ஆதரிக்கிறது, 4K60fps HDR வீடியோ பதிவு, 250 பொருள்களை அடையாளம் காணும் 4K செக்மென்டேஷன், Night Vision 2.0 உள்ளிட்டவை உள்ளன.
Snapdragon X75 5G மோடம், 4.2Gbps வேகத்துடன் Sub-6GHz ஆதரவு, Wi-Fi 7, Bluetooth 6.0, UFS 4.0, LPDDR5X RAM, Quick Charge 5 ஆகியவை இதில் உள்ளன. எனர்ஜி எஃபிஷியன்ஸி 39% மேம்பட்டதாக உள்ளது.
iQOO Z10 Turbo, POCO F7, Xiaomi, Oppo, Meizu போன்ற ஸ்மார்ட்போன்களில் இது இடம்பெறும். AnTuTu ஸ்கோர் 2 மில்லியனுக்கு மேல் உள்ளதாக கூறப்படுகிறது, இது மிட்-ரேன்ஜ் ஃபோன்களுக்கு சக்திவாய்ந்த தேர்வாக அமைகிறது