கமல்ஹாசன் திரை வரலாற்றில் இதை முதன் முறையாக பாக்குறோம்! - Thug Life படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம்!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் (சிம்பு), த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5, 2025 அன்று வெளியாகியது. 

இப்படம் கமல்-மணிரத்னம் கூட்டணியின் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்ததால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படத்தைப் பார்த்த ரசிகர்களும் விமர்சகர்களும் சிம்புவின் நடிப்பு கமல்ஹாசனை ஓவர் டேக் செய்ததாக கருதுகின்றனர். 

சமூக ஊடக விமர்சகர் உமைர் சந்து, “தக் லைஃப் ஒரு கல்ட் கிளாசிக் த்ரில்லர். கமல்ஹாசனும் சிம்புவும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளனர். 

ஆனால், சிம்புவின் உணர்ச்சிகரமான நடிப்பும், வீரியமான ஆக்ஷன் காட்சிகளும் படத்தின் உயிர்நாடி” எனப் புகழ்ந்தார். ட்ரெய்லரில் கமல்-சிம்பு மோதல் மையப்படுத்தப்பட்டு, சிம்புவின் கெட்டப் மற்றும் வசனங்கள் ரசிகர்களை கவர்ந்தன. 

கமல்ஹாசனின் 60 ஆண்டு திரைப்பயணத்தில் முதன்முறையாக மற்றொரு நடிகர் அவரை மிஞ்சியதாக ரசிகர்கள் பேசுகின்றனர். 

“சிம்பு 16 அடி பாய்ந்து தந்தையை மிஞ்சிவிட்டார்” என்று கமலே புகழ்ந்தது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், மணிரத்னத்தின் பிரமாண்டமான இயக்கமும் படத்துக்கு பலம் சேர்த்தாலும், சிம்புவின் ஆதிக்கமே பேசு பொருளாக உள்ளது. 






 

--- Advertisement ---