அப்படி ஒன்னு இல்லவே இல்ல.. உடலுறவு குறித்த கேள்விக்கு VJ அர்ச்சனா ஷாக் பதில்!

சமீப காலமாக பள்ளி சிறுவர்களிடம் கூட போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தவறான வழிகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

பொதுவாக ஆண்களிடம் இது பரவலாகக் காணப்பட்டாலும், தற்போது பெண்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. பள்ளி மாணவிகள் சக மாணவர்களுடன் தவறான பழக்கங்களில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. 

Teenagers addiction and situationship trend in Gen Z

இதற்கு இணையாக, Gen Z இளைஞர்களிடையே ‘Situationship’, ‘Casuals’, ‘QuickReley’ போன்ற புதிய சொற்கள் புலப்படுகின்றன. இவை அனைத்தும் உடலுறவை மையமாகக் கொண்டு, குறுகிய கால உறவுகளை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை. 

இவற்றின் பொருள், ஆணும் பெண்ணும் தற்காலிகமாக நெருக்கமாகி உடலுறவு கொண்டு, பின்னர் பிரிவதாகும். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை-தொகுப்பாளினி அர்ச்சனாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

“Situationship என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டதற்கு, அவர் “குறிப்பிட்ட காலத்தில் நம்மை பயன்படுத்தி, வேலை முடிந்ததும் கழட்டி விட்டு செல்வது இதுதான்” என்று வெள்ளந்தியாக பதிலளித்தார். 

ஆனால், நிகழ்ச்சி நெறியாளர் அதை மறுத்து, “நட்புக்கு மேலே, காதலுக்கு கீழேயான ஒரு நூதன உறவு” என்று விளக்கினார். இதற்கு கடுப்பான அர்ச்சனா, “அப்படி ஒன்னு இல்லவே இல்ல.. இன்றைய காலகட்டத்தில் யார் இப்படி இருக்கிறார்கள்? இது கிடையாது” என்று பதிலடி கொடுத்தார். 

அவர் இதுபோன்ற பழக்கங்களை ஏற்க மறுத்து, இது இருக்கக் கூடாது என்பதை நிறுவ முயற்சித்தார். ஆனால், நிதர்சனம் வேறு. இளம் தலைமுறையின் இந்த மாற்றம், சமூகத்தை அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ந்து வருகிறது. 

போதைப்பொருள், தவறான உறவுகள் என பல அபாயங்கள் இவர்களைச் சூழ்ந்துள்ளன. அர்ச்சனாவின் கருத்து, இதைத் தடுக்கும் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படலாம்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--