உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதிக்கு திமுவில் முக்கிய பொறுப்பு? யார் காரணம் தெரியுமா?

திமுகவின் இளம் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்து வரும் இன்பநிதிக்கு ஊடகங்களின் கவனம் திரும்பத் தொடங்கியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் போலவே, தனது உடையில் திமுக கொடியை பதித்து வலம் வரும் இன்பநிதியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

சமீபத்தில் கலைஞர் டிவியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதன் மூலம் அவரது அரசியல் பயணம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' புத்தகத்தின் 2ம் பாகத்தின் சிறப்பு பிரதியை இன்பநிதி பெறவுள்ளார். 

Inbanidhi’s rise in DMK with Kalaignar TV role and Durga Stalin book launch

இந்த விழா சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், திமுகவின் முக்கிய தலைவர்கள், குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்வு மூலம் இன்பநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அறிவாலய வட்டாரங்களின் தகவல்களின்படி, அடுத்த சில மாதங்களில் இன்பநிதி கட்சியின் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்படவுள்ளார் என்று கூறுகிறார்கள்.

ஆனால், இது குறித்து எந்த விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்பநிதியின் இந்த உயர்வு, திமுகவின் இளைஞர் பிரிவில் புதிய ஆற்றலை உருவாக்குவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. 

மேலும், அவர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து கட்சியின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு தயாராகி வருவதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த முயற்சிகள் திமுகவின் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

இன்பநிதியின் பொறுப்புகள் மற்றும் அவரது பங்களிப்பு குறித்து திமுகவினர்

 ஆர்வத்துடன் காத்திருப்பதாக தெரிகிறது. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, திமுகவின் எதிர்கால திட்டங்கள் குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது. 

இன்பநிதியின் அரசியல் பயணம் எதை நோக்கி இருக்கும்? எப்படி முன்னேறும்? என்பது அனைவரது கவனத்திலும் உள்ளது.

Summary in English: Inbanidhi, sporting the DMK flag on his attire like Udhayanidhi Stalin, gains media spotlight. Recently appointed to a key role at Kalaignar TV, he will receive a special copy of Durga Stalin’s book 'Avarum Naanum' Part 2 today. Sources suggest he may soon hold a major party post, with an official announcement expected soon.