தமிழ் திரையுலகில் நடிகையாகவும், பரதநாட்டிய கலைஞராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பிரபலமான சொர்ணமால்யா, அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து, தனது அனுபவங்களையும் வாழ்க்கை குறித்த பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தன்னிடம் உள்ள அணிகலன்கள் மற்றும் அவற்றின் வரலாறு குறித்து விரிவாக பேசியுள்ளார். குறிப்பாக, அவர் தனது வெள்ளி தோடு ஒன்று குறித்து சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்தார்.

சொர்ணமால்யா தனது பேட்டியில் கூறியதாவது: “என்னிடம் உள்ள ஒரு வெள்ளி தோடு, அமித்திஸ்ட் மற்றும் பெரிடாட் என்ற இரண்டு அரிய கற்களால் ஆனது. இந்த தோடு மிகவும் தனித்துவமானது. நானும் என் தங்கையும் ஒரு கடைக்கு சென்று இதை வாங்கினோம்.
ஆனால், பில்லிங் கவுண்டரில் தான் அதன் உண்மையான விலை எங்களுக்கு தெரியவந்தது. விலைப் பட்டியலில் ஒரு ஜீரோவை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோம். கவுண்டருக்கு எடுத்து வந்த பிறகு, ‘திருடனுக்கு தேள் கொட்டியது’ போல உணர்ந்தோம்.
அவர்கள் சொன்ன விலையை கொடுத்து, அதை வாங்கிவந்தேன். ஆனால், இந்த தோடு வாங்கிய பிறகு என் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன.
இந்த அணிகலன் எனக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வந்ததாக உணர்கிறேன்.”இந்த பேட்டி, சொர்ணமால்யாவின் எளிமையான பேச்சு மற்றும் அவரது அணிகலன்கள் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தியதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘அலைபாயுதே’, ‘மொழி’ உள்ளிட்ட படங்களில் நடித்து, பரதநாட்டிய கலைஞராகவும் புகழ்பெற்ற சொர்ணமால்யா, தனது தனித்துவமான ணிகலன் தேர்வு மற்றும் அதன் பின்னணியில் உள்ள கதையை பகிர்ந்து, மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அவரது ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களை தூண்டியுள்ளது.
Summary in English : Actress Swarnamalya, in a recent YouTube interview, shared her experience about a silver earring adorned with rare amethyst and peridot stones. She recounted mistakenly overlooking a zero in the price tag while purchasing it with her sister, only realizing the high cost at the billing counter. Despite the shock, she bought it and believes it brought her good fortune.