அக்கா தம்பி உறவை சிதைத்த கேவலமான ஜென்மங்கள்.. பதை பதைக்க வைக்கும் கொடூர சம்பவம்..

வேலூர் மாவட்டம், பொடுகத்தூர் அருகே குப்பம்பாளையம் கிராமத்தில், 36 வயது பாரத் என்பவர் தனது மனைவி நந்தினி மற்றும் அவரது கள்ளக்காதலன் சஞ்சயால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்த பாரத், வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் இருப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நந்தினி, அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சயுடன் தகாத உறவில் இருந்தார். ஆரம்பத்தில் அக்கா-தம்பி உறவாகத் தோன்றிய இவர்களின் நட்பு, பின்னர் கள்ளக்காதலாக மாறியது.

இதை அறிந்த பாரத், மனைவியை கண்டித்தபோதும், நந்தினி தனது உறவை முறித்துக்கொள்ளவில்லை. இதனால், கணவரை அகற்ற திட்டமிட்ட நந்தினியும் சஞ்சயும், திங்கட்கிழமை மாலை மளிகை பொருட்கள் வாங்குவதாகக் கூறி பாரத்தை வெளியே அழைத்தனர்.

பாரத்துடன் அவர்களது மூன்று வயது குழந்தையும் மோட்டார் சைக்கிளில் பயணித்தது. மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், சஞ்சய் திட்டமிட்டபடி சாலையில் தென்னை மட்டைகளை வைத்து வழிமறித்தார்.

பைக் நிறுத்தப்பட்டபோது, இருட்டில் மறைந்திருந்த சஞ்சய், அறிவாளால் பாரத்தின் கழுத்து மற்றும் தோள்பட்டையில் ஆழமாக வெட்டினார். பாரத் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

நந்தினி, ஊராரை அழைத்து விபத்து போல நாடகமாடினார். சஞ்சய், இரத்தக் கறைகளை கிணற்றில் கழுவிவிட்டு, வேறு உடை அணிந்து, ஒன்றும் தெரியாதவர் போல சம்பவ இடத்திற்கு வந்து நின்றார்.

ஆனால், பாரத்தின் மூன்று வயது குழந்தை, “அம்மாவும் மாமாவும் அப்பாவை அடித்தார்கள், அப்பா எழுந்திருக்கவில்லை” என உண்மையை வெளிப்படுத்தியது.

இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நந்தினி மற்றும் சஞ்சயை கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொடூர சம்பவம், குழந்தையின் கண்முன் நடந்த கொலை மற்றும் மனைவியின் துரோகத்தால் பாரத் உயிரிழந்த சோகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது.