பிரபல தமிழ் பின்னணி பாடகி சுசித்ரா, திரையுலகில் போதைப் பொருள் கடத்தல் குறித்து தனது அதிர்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்து, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
விமான நிலையங்களில் பிரபல நடிகைகளைப் பயன்படுத்தி, சோதனைகளைத் தவிர்த்து, போதைப் பொருள் கடத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுசித்ராவின் கூற்றுப்படி, விமான நிலைய ஊழியர்கள், பிரபலங்களைப் பார்த்தவுடன் செல்பி எடுக்க முயல்வதால், அவர்களை கடுமையான சோதனைக்கு உட்படுத்துவதில்லை.
இதனை சாதகமாகப் பயன்படுத்தி, நடிகைகள் மற்றும் நடிகர்கள் உடலில் மர்ம உறுப்பில் மறைத்து போதைப் பொருளைக் கடத்துவதாகவும், குறிப்பாக நடிகை பூஜா, பெங்களூரிலிருந்து இவ்வாறு செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விமான நிலையத்தில் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக நடந்து வரக்கூடிய நடிகைகளை பார்த்தவும் கண்டு பிடித்துவிடலாம் அவர்கள் போதைப்பொருளை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று.
சுசித்ரா தனது அனுபவத்தை விவரிக்கையில், உயிரியல் துறையில் பட்டம் பெற்றவர் என்ற முறையில், வேலைவாய்ப்பு தேடியபோது ஒரு அரசியல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தன்னை அணுகி, ஆம்ஸ்டர்டாமில் உயிரியல் துறை நிறுவனத்தில் வேலை வழங்குவதாகக் கூறியதாகத் தெரிவித்தார்.
ஆனால், அங்கு சென்றபோது, அந்த நபர் உயிரியல் துறையுடன் தொடர்பற்றவர் என்பதும், அவரை போதைப் பொருள் கடத்தலில் “குருவியாக” பயன்படுத்த திட்டமிடப்பட்டதும் தெரியவந்தது.
பிரபலமாக இருப்பதால், தன்னை விமான நிலையங்களில் சோதனை செய்ய மாட்டார்கள் என்று கருதி இந்த முயற்சி நடந்ததாகவும், அந்நிறுவனம் மிக அதிக சம்பளம் வழங்குவதாகக் கூறியதால் சந்தேகம் எழுந்து, அங்கிருந்து தப்பித்ததாகவும் அவர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள், திரையுலகில் போதைப் பொருள் புழக்கம் குறித்து மீண்டும் விவாதத்தைத் தூண்டியுள்ளன. சமூக ஊடகங்களில், சுசித்ராவின் இந்த வாக்குமூலம் வைரலாகி, பலரும் இதற்கு ஆதரவு மற்றும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
ஆங்கில சுருக்கம் (Summary): Playback singer Suchitra revealed her experience of being targeted for drug trafficking due to her celebrity status. She alleged that actresses, including Pooja, smuggle drugs through airports, exploiting lax security checks. Suchitra escaped a suspicious job offer in Amsterdam, suspecting it was a ploy to use her as a drug courier.