இதை முதல்ல நிறுபிங்க.. சாய் அபயங்கருக்கு குவியும் வாய்ப்புகள்.. இளம் இசையமைப்பாளர் ஆதங்கம்!

பிரபல பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகன் சாய் அபயங்கர், 20 வயதில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பிஸியாக வலம் வருகிறார்.

'கட்சி சேர', 'ஆசா கூட', 'சித்திர புத்திரி' ஆல்பங்கள் மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்று இளைஞர்களை கவர்ந்தன.

Sai Abhyankar Tamil cinema music composer upcoming films PR controversy

இன்னும் ஒரு படமும் வெளியாகாத நிலையில், சூர்யாவின் 'கருப்பு', கார்த்தியின் 'மார்ஷல்', சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 24', சிம்புவின் 'எஸ்டிஆர் 49' உள்ளிட்ட எட்டு படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அட்லி-அல்லு அர்ஜுன் இயக்கும் 800 கோடி பட்ஜெட் பிரம்மாண்ட படத்திற்கும் இவர் இசையமைப்பாளராக பேசப்படுகிறார். 'கருப்பு' படத்தில் முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் சாய் அபயங்கர் இணைந்தார்.

இவரது வளர்ச்சியைப் பார்த்து சிலர் 'அடுத்த அனிருத்' என புகழ, மற்றவர்கள் பிஆர் வேலைகளால் இவர் பிரபலமடைவதாக விமர்சிக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் வைரலான மீம்ஸ் ஒன்று, சாய் அபயங்கருக்கு படவாய்ப்புகள் குவிவதையும், ஆனால் 'விக்ரம் வேதா', 'கைதி' படங்களில் மிரட்டிய சாம் சி.எஸ்.க்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதையும் சுட்டிக்காட்டியது.

இதற்கு பதிலளித்த சாம் சி.எஸ்., ஒரு பிரபல தயாரிப்பாளர் இந்த மீம்ஸைப் பார்த்து தன்னிடம் பிஆர் குறித்து கேட்டதாகவும், தான் பாடல்களுக்கே பிஆர் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

"யாராவது நான் பிஆர் செய்ததாக கூறினால், படம் பண்ணுவதையே நிறுத்துவேன்," என உறுதியாகக் கூறினார்.

சாய் அபயங்கரின் திறமையை பாராட்டிய அவர், தனக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக வருத்தப்படவில்லை எனவும், திறமையே சாய்க்கு வாய்ப்புகளை பெற்றுத் தந்ததாகவும் கூறினார்.

இந்த விவாதம் இணையத்தில் பரவி, ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

English Summary : Sai Abhyankar, son of singers Tippu and Harini, is a rising 20-year-old Tamil music composer. His singles like Katchi Sera and Aasa Kooda gained millions of views. Signed for eight films, including Suriya’s Karuppu and Karthi’s Marshal, he’s hailed as the next Anirudh, though some attribute his fame to PR efforts.