நடிகை ஸ்ரீ ரெட்டி குமுதம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஆறு ஆண்டுகளுக்கு முன் #MeToo மற்றும் போதைப் பொருள் பிரச்சனைகள் குறித்து பேசியதாகவும், அப்போது ஆதரவு இல்லாததால் விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.

சினிமாவில் தவறுகளை வெளிப்படுத்தியதால் தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக வருத்தம் தெரிவித்தார். "அமைதியாக இருந்திருந்தால், இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்," என்று கூறினார்.
சினிமாவில் போதைப் பொருள் கலாச்சாரம் இருப்பதாகவும், ஆனால் யாரையும் குறிப்பிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
தவறுகளால் வாழ்க்கை பாழானது. எப்போ இன்னொருத்தனின் ஆசைக்காக ட்ரெஸ்ஸை கழட்டினேனோ.. அப்போவே என்னை நான் இழந்து விட்டேன்.. என் வாழ்க்கை போச்சு.. உணர்ந்த அவர், தற்போது கிருஷ்ணரை நம்பி, துளசி மாலை அணிந்து வாழ்ந்து வருகிறாராம்.
துளசி மாலை அணிந்தால், மாமிசம், மது, உடலுறவு கொள்வதை ஆகியவற்றை தவிர்த்து, யூடியூபில் சமையல் வீடியோக்கள் மூலம் வருமானம் ஈட்டி தனியாக வாழ்வதாக உருக்கமாக கூறினார்.
English Summary: Actress Sri Reddy, in a Kumudam YouTube interview, reflected on her past MeToo and drug-related revelations, facing criticism and isolation.
Regretting exposing industry wrongs, she believes it ruined her life. Now, embracing spirituality, she avoids non-vegetarian food, alcohol, and relationships, earning through YouTube cooking videos.