‘ஆஹா கல்யாணம்’ வெப் தொடரில் பவி டீச்சராக நடித்து பிரபலமான நடிகை பிரிகிடா, பார்த்திபன் இயக்கிய ‘இரவின் நிழல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர்.
தற்போது விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ படத்தில் காவலராக நடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார். Rednool யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் வீடியோ தீயாக பரவி வருகின்றது.
பிரிகிடா தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட வதந்திகள் மற்றும் சவால்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

“நான் இந்த நடிகருடன் டேட்டிங் செய்கிறேன், அந்த நடிகருடன் உறவில் இருக்கிறேன் என பல வதந்திகள் பரவின. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு மாதம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. என் தந்தையின் ஊக்கமே என்னை மீண்டும் உற்சாகப்படுத்தியது,” என்றார்.
நடிகர் நகுலுடன்..
மேலும், “நடிகர் நகுல் என்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டதாகவும், நான் மறுத்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் வதந்தி பரவியது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
நானும் நகுலும் ஒரு படத்தில் கமிட்டாகி இருந்தோம், ஆனால் சில காரணங்களால் நான் அதில் நடிக்கவில்லை,” என்று தெளிவுபடுத்தினார்.
உடம்பில் பொட்டு துணி இல்லாமல்..
‘இரவின் நிழல்’ படத்தில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக நடித்ததாக வந்த விமர்சனங்களைப் பற்றி பேசிய பிரிகிடா, “நான் மெல்லிய உடை அணிந்து நடித்தேன், ஆனால் சிலர் தவறாகப் புரிந்து மோசமான கருத்துகளைப் பகிர்ந்தனர்.
அதே படத்தில் ரேகா நாயர் அரைநிர்வாணக் காட்சிகளில் நடித்ததால், நானும் அப்படி நடித்ததாக தவறாகப் பேசப்பட்டேன். ஆனால், அந்தப் படமே எனக்கு பெயர் பெற்றுத் தந்தது,” என்றார். ‘மார்கன்’ படத்தில் காவலர் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து, “குறுகிய காலத்தில் இப்படியொரு வேடம் கிடைப்பது பெரிய வாய்ப்பு.
அனுஷ்காவை முன்மாதிரியாகக் கொண்டு நடித்தேன். புதிய கதாபாத்திரங்களில் நடிக்கும்போது என் திறமை தெரிகிறது,” என்று பெருமையுடன் கூறினார்.
English Summary : Actress Brigida, known for Aha Kalyanam and Iravin Nizhal, gained praise for her role as a police officer in Vijay Antony’s Margan. In a Rednool YouTube interview, she addressed rumors about dating and alleged “adjustment” demands by actor Nakul, clarifying no such incidents occurred.