அரசியல் புள்ளியுடன் மருமகள் நடிகையை அட்ஜெஸ்ட் செய்ய சொன்ன மாமனார்.. கணவர் செவுளில் விட்ட நடிகை!

தென்னிந்திய திரையுலகில் தமிழ் சினிமாவில் இருந்து தனது கெரியரைத் தொடங்கி, பின்னர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து, பான்-இந்தியா நடிகையாக மாறிய ஒரு பிரபல நடிகை, தனது திருமண வாழ்க்கையால் ஏற்பட்ட சர்ச்சைகளால் மீண்டும் செய்திகளில் இடம்பெற்றுள்ளார். 

இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தனது நடிப்பு, நடனம் மற்றும் காதல் கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்தவர். 

மின்னல் வேகத்தில் ஆடக்கூடிய நடிகர்களுடன் போட்டி போட்டு நடனமாடி, தான் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு மிகவும் உழைப்பவர் என பெயர் பெற்றவர்.இவர் தெலுங்கு திரையுலகில் ஒரு வாரிசு நடிகரை காதலித்து திருமணம் செய்து, அங்கேயே குடியேறினார். 

ஆனால், திருமணத்திற்கு பிறகு, கணவரின் குடும்பம் இவரை படங்களில் நடிக்க வேண்டாம் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதற்கு பதிலளித்த நடிகை, "நான் சினிமாவில் நடித்ததால் தான் நமக்கு இந்த உறவு ஏற்பட்டது. 

நடிப்பு எனது கனவு," எனக் கூறி, தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இதனால், கணவரின் குடும்பத்தினருடன் மோதல்கள் ஏற்பட்டன. மேலும், ஒரு அரசியல்வாதியால் கணவரின் குடும்பத்திற்கு பிரச்சினை ஏற்பட்டபோது, அந்த பிரச்சினையை தீர்க்க நடிகை தனியாக அவரை சந்திக்க வேண்டும் என அரசியல்வாதி கூறியதாகவும், இதை நடிகரின் தந்தை மறைமுகமாக நடிகையிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் கோபமடைந்த நடிகை, தனது கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் ஒரு கட்டத்தில் உடல் ரீதியான மோதலாகவும் மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பின்னர், கணவரின் குடும்பம் நடிகையை குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்தியது. ஆனால், "இப்போது குழந்தை பெற முடியாது, இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும்," என நடிகை மறுத்துவிட்டார். 

இதனால், குடும்பத்தினர் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்ததாகவும், இறுதியில் நடிகை திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த விவாகரத்திற்கு இந்த சம்பவங்களும் ஒரு காரணமாக இருக்கலாம் என தென்னிந்திய திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. இந்த நடிகையின் தைரியமான முடிவு, ரசிகர்கள் மத்தியில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary in English: A South Indian actress, who rose to pan-India fame starting from Tamil cinema and thriving in Telugu films, faced turmoil in her marriage to a Telugu actor from a prominent family. Despite her success in acting, dance, and romance roles, her in-laws opposed her career continuation post-marriage. 

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--